Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com

  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Brahmin Today - For your Attention         பிராமின் டுடே - உங்கள் கவனத்திற்கு


The Magazine for Brahmins


ஆஸ்திக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டம் பழையவலம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானதும் அகஸ்தியர் முனிவரால் பூஜிக்கப்பட்டதுமான ஸ்ரீ சத்யாதாட்சி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் கடந்த 13.8.08 அன்று பலாலயம் செய்யப்பட்டு திருப்பணி நடைபெறவுள்ளது. (திருவாரூரிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் கிழக்குத் திசையில் பழையவலம் கிராமம், சாலை வசதியுடன் அமைந்துள்ளது.)

திப்பிராஜபுரம் பிரும்மஸ்ரீ P.N. ராமமூர்த்தி தீக்ஷிதர் அவர்கள் தலைமையில் பழையவலம் ஸ்ரீ K. அப்பு அய்யர் அவர்களின் குமாரர் A. ஸ்ரீதர் மூலம் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீதெட்சிணாமூர்த்தி, ஸ்ரீ விக்னேஸ்வரர், ஸ்ரீ முருகன் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. இந்த ஆலயம் கட்டி முடிக்க ரூ. 35,00,000/- செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருப்பணி வருகிற 2009க்குள் கட்டிமுடிக்கவேணும் என இறைவனை வேண்டிக்கொள்கிறோம். சென்னை, பெங்களூர், பம்பாய், தில்லி, கல்கத்தா போன்ற பெருநகரங்களில் வாழும் அனைத்து பக்த கோடிகளும், வெளிநாட்டில் வாழும் அனைத்து இந்தியர்களும் தாராளமாகப் பொருளுதவி செய்து ஆலய வளர்ச்சிக்கும் கும்பாபிஷேகம் இனிதே நடைபெறவும் உதவிட பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். திரவ்ய சகாயம் செய்வோர் கீழ்கண்ட முகவரிக்குத் தொடர்புகொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்.

A. Sridhar
Priya Flat, 196/2, 1st Cross Street, Srinivasa Nagar,
Balaiyagh Garden, Madippakkam, Chennai - 600 091.
South India
Phone: 044-22581837
Mobile: 9444022431

திருப்பணிக்குழு

207, ஏழுமலை சாலை, நன்மங்கலம், சென்னை - 600 117
Tel: 98841 26417/93826 60648 (http://nambaral.blogspot.com)

அன்புடையீர்,

வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரியை அடுத்த நம்பரை என்ற புனித க்ஷேத்திரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவாலயம் மிகவும் சிதிலமான நிலையில் உள்ளது. ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளின் ஆணைக்கேற்ப புராதன சிவாலயங்களைப் பராமரிப்பதில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நம் குழுவினர் தற்போது இந்த நம்பரையிலுள்ள அருள்மிகு மரகதவல்லி என்கிற காமாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ கௌரீச்வரர் ஆலயத்தின் புனருத்தாரணப் பணியை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இந்த ஆலயத்தின் சிவனின் கருவறையை அமைத்து முடித்துள்ளனர் உள்ளூர் அன்பர்கள். நம்பரை பக்தர்களுடன் கைகோத்து இன்னும் செய்து முடிக்க வேண்டிய பணிகளான சிவன் விமானம், அம்பாளின் கருவறை விமானம் பிறதெய்வ சன்னதிகள் ஆகிய பணிகளை எளிய அளவில் ஏற்றுநடத்தி முடிக்க நம் திருப்பணிக்குழு முன்வந்துள்ளது. ஆலயப் புனருத்தாரணப் பணிகளுடன் தொடர்ந்து நித்திய வழிபாடுகளும் தடையின்றி நடைபெற உள்ளூர் அன்பர்களின் துணையுடன் செய்து முடிப்பது நம் குழுவின் தனிச் சிறப்பியல்மாகும்.

நந்தி இறைவனை நேர்முகமாகக் காண்பது ஒரு தனிச் சிறப்பு. வல்லுநர்கள் இக்கோயில் தோன்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனக் கருதுகிறார்கள். மேலும் ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் கதிரவன் தன் பொற் கிரணங்களால் இறைவியையும் இறைவனையும் ஆராதிப்பது காண்பதற்கரிய ஒரு பெருங்காட்சியாகும். மேலும் போக முனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண பாணலிங்கம் (திமிரி பேருந்து நிலையத்தருகில்) மற்றும் ஆற்காட்டை ஒட்டிய ஷடாரண்யம் இந்தத் தலத்தருகே இருப்பது சிற்ப்புடையது.

பக்தப் பெருமக்கள் இத்திருப்பணியில் பங்கு கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து இறைவனின் திருவருளைப் பரிபூரணமாய்ப் பெறவேண்டுமாய்ப் ப்ரார்த்திக்கிறோம். உதவி சிறியதெனினும் பயனுடையதே. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் தலபுராணத்தில் ஆலயப் பணிக்கென ஒரு செங்கல் அளித்தால்கூட பூதகணங்கள் அவர்களைக் கைலாயத்தில் வரவேற்பதாகக் கூறுகின்றது. சிவனுக்குச் செய்யும் எந்தத் தொண்டும் வழி வழியாக சந்ததியைக் காக்கும் என்பது திண்ணம். திருக்கோயில் அமைவிடம் ஆற்காடு-திமிரி-ஆரணி சாலையில் திமிரியிருந்து முன்னன்புரம் வழியில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் “நம்பரை கிராமம்” உள்ளது.

காசோலைகள் அனுப்பவேண்டிய முகவரி:

திருப்பணிக்குழு என்ற பெயரில் எடுத்து C/o. எஸ். லக்ஷ்மிநாராயணன், 207, ஏழுமலைச்சாலை, நன்மங்கலம், சென்னை-117, அல்லது ஆன் லைனிலும் (online) செலுத்தலாம்.

கார்பொரேஷன் வங்கி, மடிப்பாக்கம் கிளை, சேமிப்பு கணக்கு எண்: 0864/2862.
National Remittances, RTgs/Neft IFS Code Corp 000864/2862,
Inter National Remittances Swift Code corp Inbb/122 2862

Designed and maintained by AKR Consultants