பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       Brahmin Today - June 2008   பிராமின் டுடே - ஜூன் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites



பிரிய பிராமணச் சொந்தங்களே!

ஒவ்வொரு வருடமும் பிராமின் டுடே ஜூன் மாத இதழ் கல்வி மலராகத் தொடர்ந்து வெளிவருவது நாம் அறிந்ததே. கல்வி தொடர்பான கணக்கற்ற விஷயங்களின் கருத்துகளை நாம் எடுத்துக்காட்ட எண்ணினா லும் எப்போதும் நம் எதிர் வந்து இடர் தரும் பிரச்சினையாக இடஒதுக்கீடு விளங்குகின்றது. மண்டல் கமிஷன் ஆலோசனைகளைத் தொடர்ந்து இயற்றப்பட்ட 27 சதவீத OBC இடஒதுக்கீடு "மூடியைத் திறந்த ஜாடியிலிருந்து முன்வந்து நின்ற ஆவி"யைப் போல நம் சமூகத்தை இன்னும் நாடி வந்து தொல்லை தருகின்றது. ஓங்கி நின்ற ஒரு பெரும் போராட்டத்தின் தற்போதைய தீர்வாகத் தரப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பைப் பற்றி பாரபட்சமற்ற ஒரு நடுநிலை ஆய்வினையே இம்மாத முகப்புத் தலைப்பு எடுத்துக்காட்டியுள்ளது. இதன் தொடர்பான வாசகர்களின் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

திருமணங்கள் முடிந்தவுடன் மணமக்களின் அருகில் நிற்பவர்கள் கைகுலுக்கி பரிசு வழங்கும் தற்கால வழக்கத்தினை ஆதரித்து எழுப்பப்பட்டிருக்கும் வாசகர் குப்புசாமியின் கருத்துகள் ஏற்புடையதா இல்லையா என்பதை இனிவரும் எதிர்வினைகள் எடுத்துச் சொல்லும். சத்குருவைப் பற்றி ஒரு பொதுவான விளக்கக் கட்டுரையாகவும் சத்குருக்களில் ஒருவரான ஷீரடி சாய்பாபாவைப் பற்றி கோவை பாக்யரதி ராமனாதன் எழுதியுள்ள ஆன்மிக கட்டுரை பாபா பக்தர்களைப் பரவசப்படுத்தும்.

"திருவேங்கடவன் சரவண பத்து" என்ற அருமையான கவிதை தொகுப்பினையும் அதை இயற்றியுள்ள வித்வான் வி. துரைசாமி என்ற அந்தணப் பெருந்தகை பற்றியும் நமக்கு அறிமுகம் செய்துள்ள வாசகர் N. சுந்தரம் அவர்கள் நம் பாராட்டுக்குரியவர்.

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இந்த வருடம் முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் Shift முறையினால் அதிகமானவர்கள் கல்லூரிகளில் இடம் பெறுவது சாத்தியம் என்றாலும் இட ஒதுக்கீடு மற்றும் General quota முறையினால் நம் சமூக மாணவர்கள் அரசு கல்லூரிகளில் நுழைவது இயலாத காரியமாக ஆகிவிட்டது. தனியார் கல்லூரிகள் மட்டுமே ஒரே புகலிடம் என்றாகிவிட்டபிறகு T. S. நாராயணசாமி கல்லூரி போன்ற நன்கொடை வசூலிக்காத நல்ல கல்லூரிகள் மட்டுமே நமக்கு துணையாக விளங்குகின்றது. அக்கல்லூரியின் விளக்க உரையை நம் இதழில் காணும் அன்பர்கள் அக்கல்லூரி பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வழக்கமான நம் பகுதிகளான ஸ்ரீமத் பாகவதம், பாரதி பக்கம், எந்தையும் தாயும், அப்பய்ய தீட்க்ஷிதர் வரலாறு போன்ற வகுதிகளுடன் Sparks பகுதியில் நாம் வெளிப்படுத்தி இருக்கும் ஒரு புதிய சிந்தனை பிராமின் டுடே எதிர்காலம் தொடர்புடைய ஒரு செயல் திட்டமாகும். அதைப் படித்து அனைத்து வாசகர்களும் தங்களின் மேலான கருத்துகளைத் தயங்காமலும் தாமதிக்காமலும் அஞ்சல், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் உடனே தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்த்துரை பிராமணர்களும் இட ஒதுக்கீடும்



    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants