பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       Brahmin Today - June 2008   பிராமின் டுடே - ஜூன் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites



வாழ்வுத் திறன் வளர்க்கும் டி.எஸ். நாராணசாமி கல்லூரி

டி.எஸ். நாராயணசாமி கலை அறிவியல் கல்லூரி நன்கொடைகள் ஏதும் வசூலிக்காத ஆண், பெண் இரு பாலரும் பயிலும் வசதியுடைய ஒரு கல்லூரி. கடந்த 1996ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரி, சிறந்த தொழில் நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் கம்பெனியின் நிறுவனத்தின் டி.எஸ். நாராயணசாமி பெயரால் தொடங்கி இந்தியா சிமென்ட்ஸ் கம்பெனியின் நிதி உதவியுடனும், மேற்பார்வையிலும் மகாபலிபுரம் - பழைய மகாபலிபுர சாலைப்புறத்தில் நாவலூரில் இருக்கிறது இக்கல்லூரி. அங்கு பயோ கெமிஸ்டரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., ஆகிய இளநிலை பட்டப் படிப்புகளும், எம்.எஸ்.சி., (தகவல் தொழில்நுட்பம்), எம்.எஸ்.சி., கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பாடத் திட்டம்), எம்.எஸ்.சி., பயோ கெமிஸ்டரி ஆகிய முதுகலை பட்டப் படிப்புகளும் சிறந்த அனுபவம் வாய்ந்த, திறமையான பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நல்ல முறையில் தேர்வுகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தக் கல்லூரியில் வெறும் புத்தகப் படிப்பு மற்றும் தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தப்படுவதில்லை. முதலாவதாக அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தில் நன்றாக உரையாடுவதற்கும், தவறின்றி ஆங்கிலத்தில் எழுதுவதற்கும், கட்டணம் எதுவும் இன்றிப் பயிற்சி தரப்படுகிறது. சமுதாய உணர்வு, மக்கள் தொடர்பு, பொது அறிவு, நம் நாட்டின் பொருள £தார வளர்ச்சி பற்றிய கண்ணோட்டம் ஆகியவற்றில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு விசேஷப் பயிற்சி தருகின்றனர். அனைத்து மாணவர்களுக்குமே கட்டணம் எதுவும் இல் லாமல் கணினியைக் கையாளும் பயிற்சி அடிப்படையில் தொடங்கி நடத்தப்படுகிறது.

பயோ கெமிஸ்ட்ரி மாணவர்களுக்கு கல்லூரி ஆய்வுக் கூடத்தில் கொடுக்கப்படும் செய்முறைப் பயிற்சியோடு நில்லாது ஒவ்வொரு, மாணவ, மாணவியும் நகரில், சிறந்த டயோக்னாஸ்டிக் லேபரட்டரியில் செய்முறைப் பயிற்சி பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. வணிகப் பிரிவு மற்றும் பி.பி.ஏ., மாணவர்கள், கார்பரேட் தலைமையிடங்களில் செய்முறைப் பயிற்சி பெறுகின்றனர். இவையெல்லாம் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முழுமையான கல்விப் பயிற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் படிப்பு முடித்து வெளியேறுவதற்குரிய சூழல்களை உண்டாக்குகின்றன. கார்ப்பரேட் மற்றும் ஷேர் புரோக்கிங் ஆபீஸ் ஆகியவற்றில் செய்முறைப் பயிற்சி எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் புரோகிராம்களில் பங்குகொள்ளுதல் மற்றும் இக்கல்லூரி மாணவ, மாணவியர் பல்வேறு உலகப் போட்டிகள் மற்றும் ஆசியக் கண்டத்தில் நடக்கும் பல்வேறு நாடுகள் பங்கு கொள்ளும் விளையாட்டுப் போட்டிகளில் தொண்டர்களாகவும் பணிபுரிந்துள்ளனர். இத்துடன் நில்லாது மாவட்ட அளவில் விளையாட்டுக்கள் மற்றும் தடகளப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவ / மாணவியற்கும் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக சென்னை மாநகரின் பல பகுதிகளில் இருந்தும் குறைந்த கட்டணத்தில் நேரடியாக கல்லூரிக்கு மாணவர்கள் தனிப்பட வந்து போகவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிகவும் தரமாக, மலிவு விலையில் உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (Canteen Facility).

புருஷன் சரணப் பத்து



    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants