பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       Brahmin Today - June 2008   பிராமின் டுடே - ஜூன் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites



வாழ்த்துகிறோம்

பிராமின் டுடே இதழ் தொடக்கம் முதல் மும்பை புறநகர்ப் பகுதிகளின் ஒருங்கிணைப்பாளராகத் திகழ்ந்து முதல் இதழுக்கே பல சந்தாதாரர்களைச் சேர்த்து இன்றுவரை அந்தப் பணியைச் செவ்வனே செய்துவரும் தாகூர்லி கணேஷ் மற்றும் புஷ்பா தம்பதிகளின் குமரன் செல்வன் அமோகின் உபநயனம் 11.05.2008 அன்று தாகூர்லியில் விமர்சையாக நடந்தது. முகூர்த்தத்திற்குப் பின்பு காலை 11 மணி முதல் சுமார் 2 மணி நேரம் அங்கு நிகழ்த்தப்பட்ட "சத்யா பாகவதர்" மற்றும் அவரது குழுவினரின் த்வ்யநாம பாரம்பரிய நாம சங்கீர்த்தனம் செவிக்கு இனிய ஒரு பஜனை அனுபவமாக அமைந்தது. ஒரு பெரிய கம்பெனியில் உயர்பதவி வகிக்கும் சத்யா பாகவதர் சிறந்த குரல் வளமிக்க, வணிக நோக்கங்களுக்கு அப்பாற்பட்டவர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறு சொற்பொழிவு ஆற்றிய நம் ஆசிரியர், கலியுகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக நாம சங்கீர்த்தனம் விளங்குவதை விளக்கிப் பேசினார். வந்திருந்த திரளான அன்பர்கள் சார்பாக பிராமின் டுடே வடுவை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறது.

வாழ்த்துகிறோம்

ஒவ்வொரு மாதமும் பிராமின் டுடே இதழ் நாடு முழுவதும் உள்ள நம் வாசகர்களை மாதந்தோறும் தவறாது சென்றடையும் மகத்தான பணியை சிறப்பாக செய்யும் அடிப்படை கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. இந்தப் பெருங்குறை ஒரு தடையாக இல்லாமல் கூடியவரை பெருங்குற்றங்கள் இன்றி இதழ் பட்டுவாடா செய்வது நம் சென்னை ஒருங்கிணைப்பாளர் திரு. K.M. வெங்கட்ராமன் அவர்களின் சீரிய முயற்சினால்தான் என்பது மிகையல்ல. நம் இதழ் சந்தாதாரர்கள் பட்டியலை கணனி மூலம் முறைப்படுத்தி பெரும் காசு செலவின்றி முகப்பு லேபிள் வடிவமைத்து அதன் தொடர்புடைய எல்லா பணிகளையும் செய்துவரும் இவர் பாராட்டுக்குரியவர். கடந்த 26.05.2008 அன்று திரு. K.M. வெங்கட்ராமன் கோமதி தம்பதிகளின் குமாரன் ரவிஷங்கரின் உபநயனம் மும்பாய் மாட்டுங்கா பஜனை சமாஜில் இனிதே நடந்தேறியது.

நம் இதழ் ஆசிரியர் பம்பாய் பிராமணன் மற்றும் அனேக பிராமின் டுடே வாசகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அனைவரின் சார்பிலும் பிராமின் டுடே செல்வன் ரவிஷங்கரை வாழ்த்துகிறது.

நிகழ்வுகள்: ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்

அம்பா சமுத்திரம் அருள்மிகு கிருஷ்ணஸ்வாமி கோவிலில் 30.4.2008 முதல் 6.5.2008 முடிய "ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்" ஸ்ரீ நாம பிக்ஷா கேந்திரா பக்தர்களால் விமரிசையாக நடத்தப்பட்டது. சொற்பொழிவாளர் ஸ்ரீ எஸ். வைத்யநாத சர்மா அவர்கள் இயற்றி ஸ்ரீ முருகாநந்தா பிரிண்டர்ஸ் உரிமையாளர் ஸ்ரீ எல். ராமகிருஷ்ணன் அவர்களால் பிரசுரிக்கப்பட்ட "ஸ்ரீ பாகவத ரஸாம்ருதம்" என்ற நூல் இலவச வெளியீடாக வழங்கப்பட்டது.





பிராமணச் சொந்தங்களே!



    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants