We say what we believe |
|
Contents Brahmin Today - June 2008 பிராமின் டுடே - ஜூன் 2008 அட்டவணை |
||
|
Editor: Vasan
Web Master: Favorites
Achalam.com |
புருஷன் (தொடர் - 2)
Dr. S. ராமகிருஷ்ணன் அந்த நண்பன்தான் ஈஸ்வரன் அக்ஷர புருஷன் நமது உடல்தான் க்ஷர புருஷன். ஈஸ்வரன் ஒருவன் சர்வஞானியாக, சர்வசக்திமானாக சர்வாந்தர்யாமியாக பிரபஞ்ச நிர்வாஹகனாக இருப்பதால்தான் உலகமும் பஞ்சபூதங்கள் சூர்ய சந்திரர்கள் சட்ட திட்டத்திற்குட்பட்டு இயங்குகின்றன. வெறும் இயற்கை (Nature) என்றால் ஒழுங்கு முறை இருக்காது. உதாரணமாக, பூந்தோட்டம் அழகாக, சீராக இருக்கிறது. காரணம் தோட்டக்காரன். ஆனால், தோட்டக்காரன் இல்லாத காடுகளிலும் செடி கொடிகள், மரங்கள் வளருகின்றன ஆனால், தாறுமாறாக இருக்கின்றன. ஆகவே, உலக நியதிக்கும் கட்டுப்பாட்டிற்கும் க்ஷர புருஷன் அக்ஷர புருஷனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறான். இந்த க்ஷர புருஷனுக்கும் அக்ஷர புருஷனுக்கும் மேலே இவற்றினின்றும் வேறாக உத்தம புருஷன் விளங்குகிறான். அவன்தான் புருஷோத்தமன் என்றும் அழைக்கப்படும் பரபிரும்மம் பரமாத்மா
உத்தம: புருஷ: து அன்ய: பரமாத்மேத் யுதாஹ்ருத: புருஷர்களுக்கெல்லாம் மேல் புருஷோத்தமன். அவனன்றி ஈஸ்வரனில்லை, பிரகிருதியில்லை, விராட் புருஷனில்லை. பிரபஞ்சம் இல்லை. அவனே ஆதி மூலம் ஆதி பீஜம். உத்தம புருஷனுக்கும், அக்ஷர புருஷனான ஈஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம்? உத்தம புருஷன், பரமாத்மா, எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், மூவுலகினுள்ளும் புகுந்து அதைத் தாங்குபவன், சச்சிதானந்த ஸ்வரூபன், நித்ய சுத்த, முக்த போதன் (absolute Reality, All-in-all) ஆனால் நிர்குணன், நிராகாரன். ஆகவே உலகத் தோற்றத்திற்கு நிர்குண பிரும்மம் காரண மாயினும் உலக நிர்வாகத்திற்கும் பஞ்ச பூதங்களை அடக்கி ஆளுவதிலும் நிர்குண பிரும்மம் இயங்காது. ஏனெனில், அதுதான் நிர்குணமாயிற்றே. அதற்கு சங்கல்பமேது. அதற்காகத்தான் பிரும்மம் செயல்படுவதற்காக ஈஸ்வரனாக விளங்குகிறது. அதுவும் ஒரே ஒரு ஈஸ்வரனாகத்தான். அவனே சூர்யன், அக்னி, வாயு, யமன் எல்லோரையும் அடக்கி ஆளுகிறான். (மிருத்யுர் தாவதி பஞ்சம இதியமன் எனக்குப் பயப்படுகிறான் "ந ஹி ஈஸ்வர த்வயம் ஸம்பவதி (சுங்கர பாஷ்யம்) அந்த ஒரே ஈஸ்வரனுக்கு ஸமம் ஒருவருமில்லை. அவன் ஸர்வ சக்தன், ஸத்ய ஸங்கல என்னும் நாமரூப மற்றவனாயும், பக்தானுக்ர ஹார்த்தம் பல நாமரூபங்களைத் தரிப்பவனாயிருப்பானென்றும் அவனது நாமரூபங்கள் அப்ராகிருத திவ்யமங்களமானவை என்றும் அவனே உலகிற்குக் கர்த்தா என்றும் அந்தர்யாமி, அடக்கி ஆளுபவன் என்றும் ஸார்வ சரண்யன் ஸர்வகர்ம பல பிரதன் என்றும் வேதத்திலும் உபநிஷத்துக்களிலும் சொல்லப்படுகிறது. (வேத விஞ்ஞானம் ஸ்ரீகிருஷ்ண பிர«மி சாஸ்திரிகள், அண்ணா) அந்த ஈஸ்வரனை உத்தம புருஷன் எப்படி வெளிப்படுத்துகிறான். உத்தம புருஷனான பர பிரும்மத்தினிடம் இரண்டு வித சக்திகள் உண்டு. வெளிச் சக்தி, உள் சக்தி (Internal and External). வெளிச் சக்தியான மாயை, பிரகிருதியைத் தூண்டிவிடுகிறான்.
மாயாம் து பிரகிருதிம் வித்தி கீழ்க்கண்ட சுலோகத்தில் பரமாத்மா மாயையை எப்படிக் கண் ஜாடை செய்கிறார் என வருகிறது.
ஸ்திர சர ஜாதய: ஸ்யூ: அஜய உத்த நிமித்தயு ஜோ பொருள்: எல்லாவற்றிற்கும் தலையாய முற்றிலும் விடுபட்ட பரம்பொருளே உமது வெளிச்சக்தியான மாயை. பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கும் சஞ்சரிக்காததுமான ஜீவன்களை ஆசைகளைத் தூண்டிவிட்டுத் தோற்றுவிக்கிறது. ஆனால் எங்ஙனம்? நீர் எப்போது எந்நேரத்தில் மாயையைக் கண்களால் பார்த்து (அஜய = மாயை, உதீக்ஷயா கண் பார்வைத் துடிப்பினால்) விளையாடுகிறாயோ (விஹர) அப்போதுதான் மாயை ஜீவராசிகளைத் தோற்றுவிக்கிறது. ஊக்கப்படுத்தப்பட்ட மாயையால் மட்டும், பரமனது பிரபஞ்ச சிருஷ்டி ஆசையை நிறைவேற்ற முடியாது ஏனெனில் அது (root matterஎனப்படும்) அஸ்திவாரப் பொருள்தான். பொருளை மட்டும் வைத்துக்கொண்டால் (அதாவது தங்கம் மட்டும் இருந்தால்), பொருளிலிருந்து வேண்டிய நாம ரூபிகளை (ஆபரணங்களை) உருவாக்க முடியுமா? அதற்கு வேண்டியது உபயோகப்படுத்துவதற்கான ஞானம்(Knowledge Absolute Conciousness) வேண்டாமா? இந்த ஞானமும் பரமனிடமிருந்து (Pure Conciousness) வருவதால் இதைப் பிரதிபலிக்கும் ஞானம் (Reflected Conciousness) என்று சொல்வார்கள் இந்தப் பிரபலித்த ஞானம், (Spirit என்றும் கூறுவர்) root matter ஆன பிரகியுடன் ஒன்றிணைந்து ஈஸ்வரனாக, ஸகுணனாக, சர்வசக்திமானாக, சர்வ நியாமகனாக, அகில லோக நிர்வாஹனாக விளங்குகிறது. இந்தப் பிரதிபலிக்கும் ஞானமே "புருஷன்" என்று கிருஷ்ணபரமாத்மாவே தெளிவாக உத்தவருக்கு எடுத்துச்சொல்கிறார். (ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 11, அத்தியாமம் 24, சுலோ 2, 3, 4 ஆஸீத் ஞானமயோ ஹ்யர்த ஏக மேவாவிகல்பிதம் யதா விவேக நிபுணா ஆதௌ கிருதயுகே யுகே.) "தன்மாயா பல ரூபேண கேவலம் நிர்விகல் பிதம் வாங்மனோ கோசரம் ஸத்யம் த்விதா ஸமபவத் பிருஹத் தயோ ரேகதரோ ஹ்யர்த: பிரகிருதி: ஸோபயாத்மிகா ஞானம் த்வன்யதமோ பாவ: புருஷ: ஸோ அபிதீயதே" பொருள்: ஆதியில் பிரும்மமே ஞானமயமாக, ஒருவராக, ஸத்ய ஸ்வரூபமாக இருந்தது. அது இரண்டாக (த்விதா) வெளிப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் பிரகிருதி மற்றது புருஷன். பிரகிருதிதான் (Matter) பொருள். புருஷன்தான் ஞானம் (Reflected Concious). புருஷனை Knowledge Absolute மேலறிவு என்றும் கூறுவர். பிரகிருதிக்குக் காரணம், காரியம் (த்வை தம், - இரண்டையும் பாவிக்கும் தன்மை உண்டு. காரணம் மஹத்தத்வம் காரியம் - ஈதர் - ஆகாசம் (Result) ஆனால் புருஷன் ஒன்றேதான். Substracte என்றும் கூறுவர். ஞானம் புருஷ: அபி தீயதே என்று பகவானே சொல்வதால், முன் குறிப்பிட்ட எல்லாவற்றையும்விட புருஷன் என்றால் ஞானம் Conciousness (Reflected from Brahman) Knowledge absolute, substracte spirit என்று தான் சிந்தாந்தப்படுத்த வேண்டும். (தொடரும்) |
|