பிராமின் டுடே


Net Magazine for Brahmins

We say what we believe  

 

    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Contents       BT56 Brahmin Today - October 2008   பிராமின் டுடே - அக்டோபர் 2008       அட்டவணை

 Editor: Vasan
Ph: 26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com

Favorites





ஸ்ரீசாரதாமணி மா

மா. சாரதாமணியின் பத்ம பாதங்களில் பணிந்து எழுதுகிறேன். ஸ்ரீசாரதாதேவி ஒரு குடும்பத் தலைவி போல் செயல்பட்டாலும், அவரின் தெய்வீகத் தன்மை வெளிப்படுகிறது. நீரு பூத்த நெருப்புபோல் ஒளி வீசுகிறது. சாரதா தேவி அவதரித்தது 22 டிசம்பர் 1853ஆம் வருடம். அதாவது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அவதாரத்திற்கு 17 வருடங்கள் பின்பு. ஏழ்மையான குடும்பம். இருப்பினும் கிராமத்தவர்க்கு மிக அருமையானவர். குடும்பத்தின் மூத்த பெண் ஆனதால், ஆறு சகோதர சகோதரிகளைப் பார்த்துக்கொள்வது, குடும்பத்திற்காக உழைப்பது இப்படிப் பல வேலைகள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தாயார் சந்த்ரமணி, தன் மகனுக்கு வரன் தேட ஆரம்பித்தார். காரணம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் காளி தேவியின் ப்ரத்யக்ஷ தரிசனம், நாடி தனத்தை இழந்த மனிதர் போல் பற்றற்று இருந்தார். இவரது ஜனனம் காமார்புகூர் கிராமத்தின் சமீபம் உள்ள ஜயராம் வாடி ஆகும். இது அன்னை சாரதாமணியின் ஜனன ஊர். தாய் சந்த்ரமணி கன்னியான தேவி சாரதாமாவின் விசேஷ குணங்களைப் பலர் கூறக்கேட்டு, நல்ல குடும்பம் எனத் தெரிந்து விவாஹத்திற்குச் சம்மதித்து, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சம்மதமும் பெற்றார். விவாஹம் நடந்தது. ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குணாதிசயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

அன்னையின் தகப்பனர் ஸ்ரீ ராமச்சந்தர முகோபாத்யாயா மிக பவித்ரமும், நிஷ்டையும் உடைய ப்ராம்மணர். தாய் சியாம சுந்தரிதேவி மிக பதிவ்ரதை. குடும்பம் கஷ்ட ஜீவனம். அன்னை சிறுவயதிலேயே மிக விவேகியாக இருந்தார். களி மண்ணால் காளி, லக்ஷ்மி உருவங்கள் செய்து, பக்தியுடன் பூஜை செய்வார். பால்யத்தில் படிக்க பள்ளி செல்ல இயலாவிடினும், ஸ்ரீராமகிருஷ்ணரின் உறவு மருமாள் மூலம் படிக்கக் கற்று, ராமாயணம் முதலானது படிக்கத் தொடங்கினார். பால்ய விவாஹம். அன்னைக்குத் தன் விவாஹம்கூட சரியாக நினைவில் இல்லை. விவாஹ வருஷம் 1859.

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மற்றும் ஒரு பெயர் கதாதர். அவர் 1863இல் தன் கிராமம் வந்த பொழுது அன்னையும் புகுந்தவீடு அழைக்கப்பட்டார். அவர் வயது 14 தான். கணவரை முதன்முதலாக அப்போதுதான் சந்தித்தார் எனக் கூறலாம். காமார்புகூரில் ஸ்ரீ ராம கிருஷ்ணர் 7 மாதங்களே தங்கி, தக்ஷிணேஸ்வர் திரும்பினார். அவர் அன்னைக்கு முழுமனம் செலுத்தி, ஈடுபாட்டுடன் படிப்பிக்க தீக்ஷையும் ஆரம்பித்து, காமார்புகூரில் வெற்றியும் கண்டார். அவர் மனம் மிக உயர்ந்த பக்தி பாவத்தில் ஈடுபட்டிருந்தது.

அவரின் குரு தோத்தாபுரி, ஸ்ரீராம கிருஷ்ணருக்கு விவாஹம் நடந்தேறி, அவர் தற்போது ஒரு சம்சாரி என அறிந்து, உபதேசம் செய்தார். பத்னிகூட இருப்பதுதான் உசிதம் ஆனால் புலனடக்கத்தால் யாவும் ப்ரும்ம ஸ்வரூபம், இதில் ஆண் என்ன, பெண் என்ன, பத்னியைக் காமக் கண்ணுடன் பார்க்காமல் புலன் அடக்கம் மிக உசிதம் என அறிவுறுத்தினார்.

அன்னை சாரதா கணவரைப் பதியாக மட்டுமின்றி அன்பின் ஸ்வரூபமான தெய்வமாகவே மதித்து, மனதிருப்தியுடன் ஜயராம்பாடி திரும்பினார். தன்னைக் கணவர் தம்மிடம் அழைத்துக்கொள்வார் என நம்பிக்கை உடன் இருந்தார். இத்தனை மிருதுவாகப் பேசி, மிகச் சரளமாக, சாத்வீகம் ஆகத் தன்னை நடத்தியவர், தன்னை மறக்கமாட்டார் என பதி இருக்கும் தக்ஷிணேஸ்வரருக்கு போகும் சுப நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ணரோ அன்னை சாரதாமணியை அறவே மறந்து, சதா காலமும் தேவி உபாஸனையிலேயே இருந்தார். மேலும் பக்திப் பரவசராக மாதா காளியுடன் பேசுவது, சிரிப்பது, ஆடுவது போன்ற செய்கைகளைக் கண்டு, அக்கம்பக்கம் உள்வர்கள் அவருக்குப் பைத்தியம் பிடித்துச் சுயநினைவே இல்லை என வதந்தியைக் கிளப்பிவிட்டனர். இது அன்னையின் காதிக்கும் எட்டிவிட்டது. மேலும் கிராம மக்களும் உலக ரீதிப்படி, விவாஹம் ஆன பெண், புருஷனுடன் இல்லாமல், அழைக்கப்படாமல் இருப்பதை வேறுவிதமாக எண்ணி, சாரதா அன்னையை அனுதாபப் பார்வை மற்றும் ஏளனப் பேச்சுகளால் வருந்தச் செய்தனர்.

அன்னை உண்மையான பக்தியுடனும் உருக்கத்துடனும் பிரார்த்தித்தது பரமாத்மா காதில் படவே, காரியம் கைகூட தொடங்கியது. கிராமப் பெண்மணிகள் சிலர், கங்கா ஸ்னானம் செய்யத் தீர்த்த யாத்ரை கிளம்பி தக்ஷிணேஸ்வர் போவது தெரிந்தது. சாரதாமணிமா தன் தகப்பனாரிடம் தானும் செல்ல அனுமதி கேட்டார். தகப்பனாரும் உண்மை விருப்பம் அறிந்து, தன் அன்பு மகளுக்கு உறுதுணையாக தானும்கூட வருவதாக கூறினார்.

60 மைல்கள் நடந்து கல்கத்தா செல்ல வேண்டும். வேறு பிரயாண வசதி கிடையாது. பணக்காரர்கள் பல்லக்கில் பிரயாணம் செய்வர். சாரதாவின் தந்தை பரம ஏழை. தன் மகளுடன் கால்நடையாகப் பிரயாணம் தொடர்ந்தார். அன்னையினால் கடுமையான இந்த நடை களைப்புத் தாங்க இயலாமல் ஜூரம் வந்து மூன்று நாட்கள் ஒரு குடிசையில் தங்கி, முற்றிலும் குணமாகாமலே பிரயாணம் தொடர்ந்து, தக்ஷிணேஸ்வர் அடைந்தனர். சாரதாவின் மிகப் பலஹீன நிலைகண்டு ராமகிருஷ்ணர் இரவு பகல் தன் அறையிலேயே இருக்கச் செய்து உடம்பைத் தேற்றி, பின் தன் தாயார் தங்கியுள்ள கீழ் அறைக்கு அனுப்பினார். கணவரின் பரிவு, சிஸ்ரூஷை கண்டு, அவர் பைத்தியம் இல்லை. மிக தெய்வ பக்தி, காளி மாதாவின் பக்தி என அன்னை கண்டுகொண்டார். மேலும் கணவருக்கு அனுசரணையாகத் தானும் இருக்க நிச்சயித்தார். மணம் ஆனவர்களானாலும் தெய்வ பக்தி காரணத்தினால் அன்னை தீக்ஷை பெற்றதினால், அதுவும் கணவர் மூலம் பெற்றதால், கடைசிவரை இருவரும் சிற்றின்பத்தில் ஈடுபாடின்றி பகவத் ஆராதனையிலேயே ஈடுபட்டனர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் சமாதியாகி, உலகை நீத்தபின், தன் சார்பில் அன்னையை பக்தர்களுக்கு தீக்ஷை கொடுத்து உபதேசிக்க நியமித்து ஆசி வழங்கினார்.

ருக்மணி நாராயண மூர்த்தி
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை

சத்சங்க மகிமை - 2 ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர்






 
    HOME     ISSUES     GALLERY     FEEDBACK     SUBSCRIBE     MATRIMONIALS  

Designed and maintained by AKR Consultants