Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT63 Brahmin Today - June 2009 பிராமின் டுடே - ஜூன் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




மரியாதை மஹோத்ஸவம் - தொடர்ச்சி

பிதாசர், ராஜஸ்தான்


பிதாசரில் நடந்த பெரும் ஜைன உற்சவத்தின் ஒரு அங்கமாக அங்கு வந்து குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் அனேக ஆண், பெண் துறவிகளும் அடங்குவர். தங்கள் தலைமைக் குழுவிற்கு மக்கள் அளிக்கும் மரியாதை மஹோத்ஸவ விழாவில் கலந்துகொள்ளும் கடமையை நிறைவேற்றிய அத் துறவிகளைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.

ஜைன தேராபந்த் பிரிவில் துறவிகள் இரண்டு வகை அமைப்பில் தங்கள் பணிகளைச் செய்கிறார்கள். ஆண் துறவிகள் சாது என்றும் பெண் துறவிகள் சாத்வி என்ற பெயர்களை உடைய முதல் பிரிவு கடுமையான நீண்டகால பயிற்சிக்குப் பின்பு முழு நேர துறவிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். வாயில் துணியைக் கட்டிக்கொண்டு வலம்வரும் இவர்கள் மதம் தொடர்புடைய அலுவல்களைத் தவிர வேறு எந்தப் பணியிலும் ஈடுபடமாட்டார்கள். சிறு சிறு குழுக்களாக நாடுமுழுவதும் சுற்றித் திரியும் இவர்களில் ஒருவர்தான் பின்னர் ஆச்சார்யா எனப்படும் தலைமை பீடத்தில் அமர்கிறார்.

இரண்டாம் வகை துறவிகள் இவர்களுக்கு அடுத்த நிலையில் விளங்குபவர்கள். ஆண் துறவிகள் சமனா என்றும் பெண் துறவிகள் சமனி என்றும் அறியப்படுகிறார்கள். புறத் தோற்றத்தில் வாயில் துணி இல்லாமல் துறவிகளின் மற்ற எல்லா அடையாளங்களுடனும் இருக்கும் இவர்களின் செயல்பாடுகள் பல அம்சங்களை உள்ளடக்கிய வாழ்க்கை முறையாகும்.

மதம் சார்ந்த நேரடி பணிகளில் மட்டுமல்லாது சமூக சேவை, ஆசிரியர் பணி, மருத்துவ உதவி, சமய பிரச்சாரம் ஆகிய பொதுமக்கள் ஈடுபடும் பரவலான பல விஷயங்களில் தங்களை இணைத்துக்கொள்ளும் இவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகின் பல முக்கிய இடங்களுக்கும் இப்பணிகளுக்காக அனுப்பப்படுகிறார்கள். நாடு முழுவதும் நடைபெறும் ஒவ்வொரு மரியாதை மஹோத்ஸவ வைபவத்திலும் அடுத்த இரண்டு, மூன்று, ஐந்து வருடங்களுக்கான இந்தச் செயல் அட்டவணை ஆச்சாரியா அவர்களால் அறிவிக்கப்படுகிறது.

நாம் இந்த இதழில் நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் சமணி ப்ரபா பிரக்யாஜி, ஆச்சார்யா மகாபுருஷ் பிரக்யாஜி அவர்களுக்குப் பிரியமான ஒரு இளம்பெண் துறவி ஆவார். 40 வயதுகூட நிரம்பாத இந்த சமணி சுமார் 4 வருட காலம் இங்கிலாந்தில் சமயப் பணி ஆற்றியவர். ஆங்கிலம், இந்தி, மார்வாடி மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ள இவர் ஜைன இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது தலைமை குரு மகாபுருஷ் ஆச்சார்யா அவர்கள் அவதரித்த டாம்கூர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளியைத் துவக்கி ஏழை மக்கள் நிரம்பிய அப்பகுதியில் சேவை செய்கிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டிய தருணத்திலும் ‘பிராமின் டுடே’ இதழுக்காக நேரம் ஒதுக்கி நம்மோடு பல்வேறு சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். பிராமணச் சமுதாயத்திற்கும் ஜைன சமுதாயத்திற்கும் தங்கள் அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு மிகப்பெரிய கடமை இருப்பதாகவும் அதை நிவைவேற்றும் பொறுப்பு இளைஞர்களுக்கு இருப்பதாகக் கூறினார்.

கலப்புத் திருமணம், அசைவ உணவு, புகைபிடித்தல் போன்ற பிராமண, ஜைன சமூகத்திற்கு எதிரான பழக்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு நம் இரு சமூகமும் ஒன்றுபட்ட ஒரு பொதுவான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி ‘பிராமின் டுடே’ இதழை வாழ்த்திய சமணி ப்ரபா பிரக்யாஜி அவர்களுக்கு நம் இதழ் சார்பான நன்றியையும் வாழ்த்துகளையும் வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

This is the concluding part of the four –part article of the editor, based on the experiences during his tour on Gujarat and Rajasthan states. After writing about the Jain festival “Mariyadha mahosthvam In the last issue, which gave a comparative study of Acharia Bakhthi between Jain and Brahmin communities in modern times, the writer in this issue gives a brief description of jain sadus. To be marked as one of the rare descriptive narration outside the Jain journals, the difference between a sadhvi and samani and other priesthood details of Jain religion are all given briefly in this assy. Shree Bimal Kumar Choraria who was instrumental in arranging the meeting of Samnai Prabhaaprakghyaji with our editor gets an introduction with our readers. The writer says shree Bimalji as he is called fondly, is one of the illustrious sons of Bidasar and humbly stands testimony of every basic amenity like road, pipe water, bus stand and women school the village got through the efforts of his father and relatives.

The interaction with the samani reveals the deep concern and hope she has towards not only Jain community but our Brahmin community also.

Brahmins and Sasthra Beliefs பிராமணர்களும் ஆச்சாரச் சிதைவுகளும்



Designed and maintained by AKR Consultants