Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT63 Brahmin Today - June 2009 பிராமின் டுடே - ஜூன் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




பூமாதா

ஹேமாவதி அம்மாள்

ஸ்ரீகிருஷ்ணாவதாரம், எவ்வாறு வாழ்ந்தால் சகல உயிர்களம் நன்மையடையுமோ, பூமிமாதா மகிழ்ந்து, செழுமையுறுவாளோ அதற்கானதே இவ் அவதாரங்கள். ஸ்ரீமத்பாகவதத்தின் மூலம் இவ்வாறு அறிந்தபின், ஆகம மூலம், அர்ச்சாவதார மூர்த்தியாகப் புவியில் வந்த சிறப்பையூட்டும் ஒரு கதை மட்டும் சொல்ல வேண்டும். எத்தனையோ உள்ளது ஆனாலும், மிக விரிவாக ஆவதால், படித்து அறிந்து கொள்ள சிரமம். ஆதலால், ஒன்று கூறலாம்.

கும்பகோணத்தருகே உப்பிலியப்பன் பெருமாள் கோவில் உள்ளது. மார்கண்ட ரிஷி பூமியின் அம்சமான தன் மகளைப் பெருமாளுக்குத் திருமணம் செய்து வைத்தார். பெருமாளிடம் “அப்பனே இவள் சிறுமி, சமையலில் உப்பு சரியாக சேர்க்கலை என்று கோபித்துக்கொள்ளாமல் அன்பாக நடத்தவேணும்” என்றார். பெருமாள் “எனக்கு உப்பே தேவையில்லை, பக்குவமிருந்தாலே ருஜிக்கும் அது போது”மென்றார். இன்றும் உப்பில்லாத நைவேத்தியங்களே அர்ப்பிக்கப்படுகிறது. வெகு ருஜியாக இருக்கும் இவை. புவியில் உப்பு குறைவதால் வளம் பெற்றுச் செழிக்கும். அதிகமானால் கடல் பொங்கும். இதுவரை புராணங்களில் பெருமாளின் அவதாரங்களால் பூமாதா மகிழ்ச்சியடைந்ததைச் சொன்னோம். இனி பூமி அம்சமான கோதையைக் கூறுதல் அவசியம்.

ஆண்டவர் துளசி வனத்தில் பெரியாழ்வார் மகளாக அவதரித்து, வளர்க்கப்பெற்று, ஸ்ரீஅரங்கமன்னாரையே, தன்னுள் இருத்தி பூஜித்து, வேறு சிந்தனை தவிர்த்து, அவருடனேயே ஜோதி ரூபமாகக் கலந்து விடுகிறாள். பூமியின் அம்சமாகவே பிறந்து, ஒவ்வொரு வருடமும் தேவர்களின் விடியிற் காலமான மார்கழி மாதம் திருப்பாவை பாடி அவளை வழிபடுகிறோம். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவளானாள். இவளது பாட்டுக்கள் உபநிஷது சாரமானது ஆகையால் பரம் விளங்கச் செய்கிறது. ஜீவாதாரத்துக்காகவே பாடிய பாட்டுகள் ஜீவன் நலமுற எவ்வாறு வாழ்வைக் கொள்ளத் தேவை என்பதை விளக்குகிறாள். வாருங்கள் பாடி பறை கொள்வோம் அரங்கனை. மாதம் மும்மாரி பெய்யட்டும், நோன்பு நோற்போம், அறியாமையான தமோகுணத்தை விரட்டித் தள்ளி விடியற்காலம் எழுந்து, தூயோமாய் வந்து, தூமலர் தூவி தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து உய்வோம். வாருங்கள் தீயவை பொசிங்கி, நன்மைகளே பெருகட்டும். என்றெல்லாம் முப்பது பாட்டுக்கள் நலம் பெறவே பாடியுள்ளாள்.

இவை புவியில் காலத்தில் மழைபொழிந்து, புற்கள் செழித்து, ஆனந்தமாகப் பசுக்கள் மேய்ந்து, பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள், என அதனால் அந்தணர்கள் வேள்ளி இயற்ற, நாடு செழித்து, வளம் பெருகி, யாவரும் மகிழ்ச்சி கொள்ள, பாட்டில் வெகு அருமையாக வழிகாட்டியுள்ளாள், வர்ணதருமம் குலையாது, பக்தியேகொண்டு, அவள் இயம்பியபடி வாழ்வோமானால் சீரும் சிறப்பு மிகும். அனுதினமும் பூமாதாவை, பூமியைச் சுத்தம் செய்து, அழகுறக் கோலமிட்டு அரிசி மாவால் கோலசுற்றி, செம்மன் பூசி, பூ வைத்து வணங்குவோம். கலியை விரட்டுவோம், கலிபுருஷனுக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்ப்போம். கோதையான ஆண்டாள் தான் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாக்கி, ஆனந்தமாக ஆடிப்பாடி, பூக்கள் பொழியும் நந்தவனம் அமைத்து, விதவிதமான மாலைகள் அழகுற புனைந்து, தன்னையே அரங்கனாக எண்ணி எண்ணி, சூடிப் பார்த்து மகிழ்ந்து அரங்கனுக்கு அணிவித்து மகிழ்ந்து, கலந்த இந்த வரலாறு, அவளது பாட்டுக்களை பாடி, நலம் பெறுவோம்.

பாரதம் பண்புகள் நிறைந்த பக்தி மிகுந்த உயர்நாடு மிலேச்சர்கள் வரவு நமது சிறந்த வர்ண தருமம் நீக்கப்பட்டு அவர்களது ஒவ்வாத, உயிர்களுக்கு நன்மை பயக்காத வாழ்வு ஏற்க, உலகம் வேத வழி மறந்து தானே தீயில் விழும் விட்டில் பூச்சிகள் போல ஆகலாமா? பூமாதா எந்தவிதமான பொருள்களை அவளுக்குள் புகுத்தாலும் நன்மையே கொண்டு விளைத்துத் தருகிறாள்.

பூமியின் சாரம், மஹா விஷ்ணுவினால் பூதேவி, ஸ்ரீதேவியை மணப்பதால் சீரும் சிறப்பும் பெருகுவதைப் பார்த்தோம். வேத, இதிகாச, புராண கதைகளும் நமக்கு இதை எடுத்துக் காட்டுகிறது. ஆகையினால் பூமாதாவைச் சிறக்கச் செய்வோம். மக்க இயலாதவற்றை பூமியில் இட்டும், கடாசியும், நீரோட்டும் (புவி அடியில்) தவிர்க்கும் பெரிய பெரிய மலைபோன்ற கட்டடங்கள் அமைக்காமலும், தீயவை பெருகாமலும், சண்டை சச்சரவுக்கு இடம் தராமலும் நலம்பெறச் செய்வோம். அவளின் சிறப்பிற்காகத் தாவர வர்க்கங்கள் பெருகச் செய்வோம். தாவர வர்க்கம் நமக்குப் பிராண வாயுவைத் தர, நாம் விடும் அசுத்த கரிமிலவாயுவை ஏற்பதால் அவை பெருகட்டும்.

புவி அடியில் நீர் எப்பொழுதும் தங்கச் செய்வோம். ஏரி, குளம், நரி இவற்றைத் தூய்மையாக வைத்துக் காப்போம். உழுது பயிரிட்டு, வேளாண்மைக்கு முக்கியம் தர நாடு செழித்து, மக்களும், மாக்களும், பறவைகளும் நலம்பெற வாழ்ந்து மகிழட்டும். அந்தணர்களால் வேதம் ஓதி வேள்வி இயற்றி மண்ணையும், விண்ணையும் துய்மை செய்யட்டும். ஆனந்தமாக வாழ்வோமாக.

வாழ்க புவிநலம், வாழ்க உயிரினங்கள், வாழ்க தூய்மையான செய்கைகள். பூமா தேவியை மணந்த அருளே திழைக்கச் செய்யும் ஜனாரத்னையும், ஜகன்னாதனையும் வணங்குவோம்.

ஸ்ரீமத் பாகவதம் பாரதி பக்கம்



Designed and maintained by AKR Consultants