Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT63 Brahmin Today - June 2009 பிராமின் டுடே - ஜூன் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




நூல் மதிப்புரை


வேத ப்ரபாவம்
ஆசிரியர்: ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள்

இதழ் வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
ஆசிரியர்: வேத ப்ரபாவம்
15/B பர்மா கனகம்மாள் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை 600063.

‘வைதீகமும் பண்பாடும்’ என்ற ஆன்மீக நூலின் மூலம் நம் வாசகர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான திரு. சர்மா சாஸ்திரிகளின் இன்னும் ஒரு சிறந்த நூலாக இப்புத்தகம் வெளி வந்திருக்கிறது.

வேதங்கள் என்னும் விசாலமான கோட்டைக்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் வழிப்போக்கர்களாகவே நம்மில் பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் எல்லாப் பொக்கிஷங்களும் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் மரப்பெட்டியைத் திறக்க இயலாத மனிதர்களாக உள்ள நமக்கு அப்பெட்டியில் உள்ள மாணிக்கங்களையும் வைடூரியங்களையும் பற்றி நமக்கு எடுத்துச் சொல்லி இயம்பும் விதமாக வேதங்களைப் பற்றி அறிமுகம் செய்யும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.

வேதம் என்றால் என்ன? வேதத்தின் மொழி, அதனுடைய காலம், அதில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் அதுபற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகள் ஆகிய எல்லா விஷயங்களையும் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எளிய இயல்பான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் நமக்கு வேத ஞானத்தை முழுமையாக ஏற்படுத்தாவிடினும் அதைப் பற்றிய விழிப்புணர்ச்சியைக் கட்டாயம் ஏற்படுத்தும் என்பது உறுதி.

நூலின் இறுதிப் பகுதியில் பதவி ஓய்வுபெற்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதும் இதர விஷயங்களாக இணைக்கப்பட்டிருக்கும் மகரிஷிகள், இதிகாசங்கள் மற்றும் ஆச்சாரியர்களின் அறிவுரைகள் ஆகியவை படிப்போர் எல்லோருக்கும் பயன்பெறத் தக்க வகையில் அமைந்துள்ளது. ஹோமத்திற்கும் யாகத்திற்கும் உள்ள வேறுபாடு கூஷ்மாண்ட ஹோமம் பற்றிய சிறப்புச் செய்திகளும் பலர் அறிந்திராத பயனுள்ள தொகுப்பாகும்.

‘பிராமின் டுடே’ இதழின் பெரும் ஆதரவாளர் தீவிர ரசிகரான இந்நூல் ஆசிரியர். திரு. சர்மா சாஸ்திரிகள் ‘பிராமின் டுடே’ வாசகர்களுக்கு இலவசமாக இந்தப் புத்தகத்தை வழங்க இசைந்துள்ளார்.

பாரதி பக்கம் தாமிரபரணி ஒரு ரத்னாகரம்



Designed and maintained by AKR Consultants