- The Magazine for Brahmins
எந்தையும் தாயும்
ப்ரவரம் - விளக்கம்
பஞ்ச திராவிடப் பிராமணர்களைப் பற்றி நாம் சென்ற இதழில் தொடங்கிய தொகுப்பின் விளக்கமாக ப்ரவரம் பற்றிய ஒரு சிறு குறிப்பை முதலில் அறிவது அவசியம் ஆகும். நாம் சென்ற இதழில் கண்ட நரம்தியா பிராமணர்கள் முதல் அனைத்துப் பஞ்ச திராவிடப் பிராமணர்களும் தங்கள் கோத்ர அடையாளத்துடன் பிரவரம் சார்ந்த அடையாளத்தையும் உபநயனம் போன்ற எல்லா வைதீக கர்மாக்களையும் முன்நிறுத்தி வெளிப்படுத்துவது இச்சமயத்தில் நினைவில் கொள்ளத்தக்கது.
ஒரு பஞ்ச திராவிடப் பிராமணன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்பொழுதும் "அபிவாதை" என்னும் அறிமுகம் செய்துகொள்ளும்பொழுதும் நான்கு அம்சங்களில் அதை நிறைவேற்றுகிறான். அவை: 1. கோத்திரம், 2. சூத்திரம்-கல்பம், 3. சாகை, 4. ப்ரவரம்.
1. கோத்திரம்: தங்களது ஆதிரிஷி (அ) வேத கால ரிஷியின் தொடர்ந்து வந்த ஆண் சந்ததியின் ஒருவன் என்ற தகவலை தரும் கோத்திரப் பெயர் பெரும்பாலும் அந்தக் கோத்திரத்தை தோற்றுவிக்க ரிஷியின் பெயரில் அமைந்திருக்கும். வேத கால ரிஷிகளின் சீடர்களாக விளங்கியவர்களின் வழித் தோன்றல் என்று சுருக்கமாகக் கோத்திர விளக்கத்தைக் குறிப்பிடலாம். இவ்விதக் கோத்திர ரிஷிகளில் ஒரு சில பெண் ரிஷிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
2. சூத்திரம்-கல்பம்: வைதீக கர்மாக்களைச் செய்ய வேண்டிய நுணுக்கமான விதிகள் மற்றும் நடைமுறைகள் கல்ப சூத்திரம் எனப்படும். கோத்திரத்தின் அடிப்படையில் இவற்றை விரிவாக தொகுத்த ரிஷிகளின் பெயரில் இந்தச் சூத்திரங்கள் அழைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சூத்திர நடைமுறைகளைப் பின்பற்றுவர்கள் அந்தச் சூத்திரக்காரர் ஆவார். உதாரணமாக: பெரும்பான்மையான சம்ஸ்கார விதிகளைத் தொகுத்த ஆபஸ்தம்பர் அனேகர்களில் சூத்திரதாரியாக விளங்குகிறார்.
3. சாகை: நான்கு வேதங்களின் உட்பிரிவாக உள்ள சாகைகளில் ஒரு குறிப்பிட்ட சாகைப் பிரிவை ஓதி அத்யயனம் செய்தவர்களின் சந்ததியினர் என்ற தகவலை இது வெளிப்படுத்துகிறது.
4. ப்ரவரகம்: "மிகச் சிறந்தது", "ஒப்பில்லாதது" என்ற பொருள்படும் ப்ரவரம் என்ற சொல்லின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஏராளம். ஒவ்வொரு கோத்திரத்திலும் உதித்த மிகச் சிறந்த சில ரிஷிகளின் பெயர்களை ப்ரவர அடையாளம் ஆகும். கோத்திரங்கள் முதன்முதலில் அஷ்ட ரிஷிகளின் அடிப்படையில் அமைந்தது போல ப்ரவரங்கள் கீழ்கண்ட ஏழு ரிஷிகளின் அடிப்படையில் அமைந்தன.
1. அகஸ்தியர், 2. ஆங்கிரசர், 3. அத்திரி, 4. பிருகு, 5. காஷியபர், 6. வசிஷ்டர், 7. விஸ்வாமித்திரர்.
இது மட்டுமின்றிச் சிலர் குறிப்பிடும் ஜமதக்கினி பிருகுவின் வழித் தோன்றல் மற்றும் கௌதமர், பரத்வாஜர் ஆகியோர் ஆங்கிரச வழி தோன்றல் என்று ரிக்வேதக் குறிப்பு கூறுகிறது.
ஒருவரின் ப்ரவரம் மூலம் அவர் போக்கிடத்தில் சிறந்து விளங்கிய இரண்டு, மூன்று சில சமயம் ஐந்து ரிஷிகளை நினைவுபடுத்தி அவர்களுக்கு வந்தனம் செய்யப்படுகிறது. கோத்திரத்தின் அடிப்படையில் ப்ரவரங்கள் அமைந்திருப்பதால் அந்தக் கோத்திரத்திற்கு ப்ரவரம் மூலம் நமஸ்கரிக்கப்படும் ரிஷிகள் அளித்த சூத்திர விதிகளும் நினைவுப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக காஷியப கோத்திரம், காஷியப, நிதுர்வ மற்றும் அவத்சார ஆகிய மூன்று ரிஷிகளை ப்ரவரங்களாகக் கொண்டுள்ளது. இதேபோல் ஒரு பிராமணர் தன்னைப் பற்றிய அபிவாதையைச் சொல்லும்பொழுது
ஸ்ரீவத்ச கோத்திர, ஆபஸ்தம்ப சூத்ர, தைத்ரிய ஷாக, யஜீர்வேத பார்கவ, சாயவன, ஆபாணவன், அவ்ரவ, ஜமதக்னிய, ப்ரவரஹ மற்றும் அவருடைய பெயர் (சர்மா) என்று அறிமுகம் செய்துகொள்கிறார்.
சில கோத்திரங்களின் ப்ரவரங்களைத் தெரிந்துகொள்வது இத்தருணத்தில் பயனுள்ள செயலாகும்.
நரம்தேவ் பிராமணர்களுக்குரிய சில கோத்திரங்களும் ப்ரவரங்களும் சென்ற இதழில் இடம்பெற்றன. அவை அல்லாத சில எல்லா பிராமணர்களுக்கும் உரிய ப்ரவரங்கள் கீழே வருமாறு:
| சில கோத்திரங்களும் ப்ரவரங்களும | ||
|---|---|---|
| கோத்திரம் | ப்ரவரம் | |
| 1 | வதுல | பார்கவ, வைத்வ, சாவேதச |
| 2 | ஸ்ரீவத்ஸ | பார்கவ, ஷாவன, ஆப்னவான, அவுரவ, ஜமதக்னிய |
| 3 | சடமர்ஷனம் | ஆங்கிரச புவுருத்தச த்ராசத்சய |
| 4 | கலாபோதன | விஸ்வாமித்ர கலாபோதன ஆகமர்ஷண |
| 5 | விஸ்வாமித்ர | தேவரத விஸ்வாமித்ர அவுதால |
| 6 | கொண்டின்ய | வசிஷ்ட மைத்ரவருண கொண்டன்ய |
| 7 | கௌதம | ஆங்கிரச, ஆயாசயாஸ் கௌதம |
| 8 | மௌகல்ய | தார்கஷ்ய ஆங்கிரச பார்மைசவ தவ்ய |
| 9 | குமஸ | மாந்த்ரா ஆங்கிரச |
| 10 | கண்வ | கௌர கண்வ |
| 11 | அகத்ஸிய | சௌமவாக அகத்பிய |
| 12 | பத்ராயண | ராதிதார பாரஷ் தஸ்வ |
| 13 | சங்கிரிதி | சாதவ சங்கிரிதிய |
-000-
A Brief in English
What is the meaning and how it is connected with Gothram and what are the main pravarams. Such useful information may be found in this essay.
Enthaiyum Thayum
Before going further to the pages of Pancha Dravida Brahmins this part gives a brief but vivid explanation about pravaram.
(தொடரும்)
தாமிரபரணி ஒரு ரத்னாகரம்
நிகழ்வுகள்
