Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT64 Brahmin Today - June 2009 பிராமின் டுடே - ஜூன் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




வாழ்த்துகிறோம்

நம் இதழ் தொடக்கம் முதலே நல்லாதரவு காட்டி நம்மை ஊக்கப்படுத்திவரும் வாசகர், பரமாச்சார்யாள் பரம பக்தர் திரு. A.G.. வெங்கடசுப்ரமணியன்-பானுமதி தம்பதிகளின் செல்லக் குமாரத்தி லக்ஷ்மி (எ) ரம்யாவிற்கும் -திரு. S. சுகுமாரன் தம்பதிகளின் திருக்குமாரன் சேதுராமன் (எ) வினோத்-க்கும் 20.5.2009இல் சென்னை, வடபழனி ஸ்ரீ விஷ்ணு மஹாலில் திருமணம் இனிதே நடந்தேறியது. விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மெச்சும்படி அமைந்திருந்த விருந்தோம்பலும் அறுசுவை உணவும் சிறப்பாகக் குறிப்பிடத்தகுந்த சீரிய அம்சங்கள்.

மணமக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ ‘பிராமின் டுடே’ வாசகர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.

-000-

நிகழ்வுகள்

17.5.2009 முதல் 27.5.2009 வரை கரூர் அருகே உள்ள நெரூரில் 11 நாட்கள் அதி ருத்ர மற்றும் சகர சண்டி மஹா யக்ஞம் சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்தரால் அனுஷ்டானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் புண்ணிய மஹோத்ஸவத்தில் “என்னையே எனக்குக் கொடு” என்னும் தலைப்பில் சதாசிவ பிரம்மேந்தரால் வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறிய புத்தகமாக எழுதியுள்ள Prof. S.T. வெங்கட்ராமன் (Rted. National College, Trichy) வந்திருந்த பக்த கோடிகளுக்கு அதை இலவசமாக வழங்கினார்.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்தரால் வாழ்க்கை வரலாறு, நிகழ்த்திய அற்புத லீலைகள், அவர் இயற்றிய நூல்கள் மற்றும் பிரம்மேந்தரால் பற்றி காஞ்சி மஹா சுவாமிகள் கூறிய அமுதவாக்கு ஆகியவை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.
S.T. Venkatraman, 23, New Raja Colony, Bheema Nagar, Trichy - 620 001 Tel: 0431-2411311

எந்தையும் தாயும் Reflections



Designed and maintained by AKR Consultants