Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT68 Brahmin Today - October 2009 பிராமின் டுடே - அக்டோபர் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




வழிகாட்டிய சில வைஷ்ணவ ஆச்சார்யர்கள்

ஹேமாவதி

காலம்

ஸ்ரீ நிகாமாந்த வேதாந்த தேசிகர்

வைஷ்ணவம் தழைக்க, மக்கள் இறை உணர்வு கொண்டு நலம் பெற, உயர் மனித பிறவி எடுத்த பயன் அடைய, கால, பிறவி சுழலிலிருந்து விடுபட ஆசார்யர்களும் ஆழ்வார்களும், நாயன்மார்களும், அவதார புருஷர்களும் அவதரித்தார்கள். நம் பாரதம் சிறப்புடன் 64 கலைகளையும் பயின்று இறை வழிபாடும், ஒற்றுமையும் கொண்டு விளங்கியது. வேதம் நான்கும் ஓதி உணர்ந்த அந்தணர்கள் நிறைந்து நிறைவோடு காணப்பட்டார்கள். இறை உணர்வுக்கே முக்கியம் தரப்பட்டது. பண் இசையும், பரத நாட்டியமும், கலைகளையும் அரசர்கள் மேன்மை படுத்தினார்கள். இவ்வாறு உயர் நலமே கொண்டு, வாழ்ந்த பாரத மக்கள், மேற்கத்திய மிலேச்சர்கள் வரவால் பலவகையிலும் இடர்பட்டு பாதிக்கப்பட்டார்கள். ஓராயிரம் வருடங்களுக்கு முன் இவ்வாறானது. அச்சமயம் பிற சமயம் பாதிப்பால் மக்கள் பலப்பல மதங்களை அனுசரிக்கத் தொடங்கினர்கள். நான்மறை வழிபாடு மூலம் வாழ்ந்த, நலமே யாதும், யாவும், பெற்ற, நலங்கள் குறைந்தன. மந்திரம். தந்திரம், தீய சக்திகள், மிக ஆரம்பித்தன.

அருணோதயமென, ஆதி சங்கர பகவத் பாதாள், கேரள தேசத்தில், ஆர்யாம்பி சிவ குருவிற்குப் தவப்புதல்வராக அவதரித்தார். கேரளாவிலுள்ள காலடி க்ஷேத்திரம் புண்ணிய பூமியானது. “பலபல மதங்களைக் கண்டித்து, உயிர்பெற்றவை யாவும் இவர் இறை உணர்வால், இறை அருளே பெற்று விளங்குகிறது. அது எங்கும் நீக்கமற நிறைந்த வஸ்துவே. அது “ஏக மேவா அத்வதீயம்” என்று நிர்யணம், நான் மறையில் உள”வென காட்டித் தானே தன்மயம் பெற்று, விளக்கினார். ஷன்மத ஸ்தாபனம், எளிய பஞ்சதயன பூஜை, 51 சக்தி பீடங்களில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்தார். அநேக க்ரந்தங்களும் இயற்றினார். பாரதம் பூரா வலம்வந்து, மக்களை நல் வேத வழி திருப்பினார். கீதை, உபநிடதங்களுக்கு பாஷ்யம் எழுதினார் வியாச பகவான் ஆசியுடன். இவ்வளவும் தனக்குக் கிடைத்த 32 வயதிற்குள் செய்து சரவக்ஞ்ச பீடம் ஏறினார். ஸ்ரீ ஆதிசங்கரரின் மறைவுக்குப் பின் கலியின் ஆதிக்கம் கொண்டு, அகம் மிகுந்து, கட்டுப்பாடு நீங்கி, இஷ்டம் போலிருக்கத் தலைப்பட்டார்கள் மக்கள். அத்வைதம் இயம்பிய நல்வழி. சிலரே பின்பற்ற முடிந்தது. ஆகையால் வைஷ்ணவ விசிஷ்டாத் வைதம், ஸ்ரீ பாஷ்யக்காரரான ராமானுஜரின் அவதாரத்தால் வரவேற்கப்பட்டது. ‘இவர் வரவால், இறைவழிபாடு முறை, பாஞ்சராதர ஆகமம் ஆலய வழிபாட்டோடு, ஸ்ரீமன் நாராயண மந்திரம் யாவருக்கும் தந்து, வேறுபாடில்லாது சதா ஜபிக்கச் செய்து மக்கள் மனத்தூய்மை பெறச்செய்து, திரு குலத்தவரென வழிபாடுக்கு அருகதையற்றவர்க்கும் வழி அமைத்து நலமே ஆக்கியது போற்றதலுக்கு உரியதாம். பகவன் நாம மகிமை உயிரற்றவையையும் தூய்மையாக்குமல்லவோ, இதுவும் போதவில்லை. சத்கர்மாவில் ஈடுபாடு குறையத் தொடங்கின. அந்தணர்களை மறுபடியும், இறை உணர்வுக்கு ஏற்றம் தரவும் தேவையான சமயம் ஸ்ரீ மத்வரின் அவதாரம் ஏற்பட்டது. ஆசார நியமங்களையும், அனுஷ்டானங்களையும் செய்து நலம் பெற்று, ஆசார சீலர்களாக, சாத்வீகர்களாக, அவரவர் கர்மாக்களை ஒழுக்கமும் சதயமும் கொண்டு, வாழ வகை செய்தார். ஸ்ரீ மதவர் பிரம்மமும், மற்றதும் வேறுபட்ட இரண்டேயென நிர்ணயம் செய்து அதற்கு வைதமெனவும் பெயரிட்டு வழங்கினார். நான்மறைகளின் ஏற்றமான மேன்மை உணரா மூர்க்கர்களின் வருகையால் பாரதம் மேன் மேலும் கேடுற்றும், மிலேச்சர்களின் மத மாற்ற மயக்கம் மறுபடி தலைதூக்கியது. இவ்வாறாக அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஏற்றமாக, பழையபடி மக்கள் நலமுடன் வாழ வேதவழியான இம்மூன்றும் அவசியமானதாகியது.

பதிமூன்றாம் நூற்றாண்டு, கொடூரத்தன்மை மிகுந்த முஸ்லிம் ஆட்சி ஏற்பட்டது. ஆலயங்கள் இடிக்கப்பட்டன. ஸ்ரீகளின் கற்பு குலைக்கப்பட்டது. பண்பான பாரதநாடு சீர்குலையத் தொடங்கிய சமயம் சமர்த்த இராம தாசர் வடக்கையும், தெற்கே ஸ்ரீநிகமாந்த தேசிகளும், மக்களுக்கு இறையுணர்வு ஊட்ட அவதரித்தார்கள். இன்னும் நாயன்மார்கள், ஆழ்வார்களைப் பின்பற்றியவர்களும் பகவன் நாம சங்கீதத்தனமாக பக்தியைப் பரப்பலானார்கள். இவ்வாறு பக்தி ஊட்டியவர்கள், இறை ஆர்வம் கொண்ட சீலர்கள்.

வைஷ்ணவம் தழைத்தது

ஸ்ரீ நம் ஆழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார் பாஷ்யக்காரரான ஸ்ரீ வைஷ்ணவ விசிஷ்டாத்வைதம் பிரகாசிக்கவே அவதரித்த மஹான்கள் நல்லறிவு பெற்று உய்யுமாறு மக்களுக்கு அருளியும், மக்களது புல்லறிவு மாய்த்து, உலகில் பிறருக்கு உதவவும் செய்தனர் அதன் பின் அந்தணர்களால் சுருதி, ஸ்மிருதி இரண்டும் தழைத்தன. இவற்றை ஆதாரமாக தழுவி நடைமுறையில் தமிழ், சமஸ்கிருதம், ப்ராக்ருத பாஷைகளில் உபய வேதாந்தத்துடன் அநேக க்ரந்தங்கள் இயற்றி உலகியலில் பிரகாசிக்கச் செய்த உத்தமர்கள். இறை உணர்வுக்கே முக்கியம் தந்த மஹான்கள்.

ஸ்ரீமத் தேசிகரின் அவதாரம்

ஸ்ரீமத் இராமநுஜரின் கருத்துகளும், செயல்பாடுகளும் புத்தொளி பெற, விசிஷ்டாத்வைதம் நடைமுறையில் செயல்பட ஸ்ரீ குரு மஹாத்மாவின் அருளே தேவையென, பிரபத்தி மார்க்கம் ஏற்படுத்தினார் தேசிகர். அதாவது தீர்க்க சரணாகதி ஸ்ரீ ஜகத் குருவான மஹா விஷ்ணுவிடம் உட்புகுந்து பக்தி செலுத்துதல், என்றதொரு நலம்பெரும் பக்தி மார்க்கம் ஏற்படுத்தி, ஆசார அனுஷ்டானமும், ஒழுங்கு, நேர்மை, சத்தியத்தோடு செய்தலை, செயல்பாடாக செய்வதை முறைப்படுத்தினார் அந்தணர்கள் மேன்மையுற்றனர் இக்கட்டுப்பாடான வழிமுறையால் சீரும் சிறப்பும் தழைத்தது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகர் நலம் செய்ய, உலகு செய்ய 13ஆம் நூற்றாண்டு ஸ்ரீ காஞ்சி மாநகருக்கு அருகில் துப்புல், 1268கி.பி புரட்டாசி திருவோண நக்ஷ்த்திரத்தில் அவதரித்தார். உலகு உய்ய இந்த மஹானை தந்தவர் தர்மானுஷ்டானமும் இறைபக்தியும் மேம்பட்டவர், அனந்தசூரியென்பவர். தாயார் தோத்தாரசம்மா என்பவர். விச்வாமித்திர கோத்ரம் இவர்களுக்கு.

(தொடரும்)

க்ருஷ்ண க்ருபயாம் குரு பிராப்தம் மத்தியப் பிரதேச மாநில மஹா(அ)நுபவங்கள்



Designed and maintained by AKR Consultants