Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT68 Brahmin Today - October 2009 பிராமின் டுடே - அக்டோபர் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




பாரதி பக்கம்


விதுரன் தூது செல்லுதல்
மதி சொல்லும் அறிவுரையைக் கேட்காமல் விதி செய்யும் சதியில் வீழ்ந்து மெதுவாக பல தீய வழிகளில் ஈடுபடத்தொடங்குவது பொதுவாக நாம் காணும் உலகியல் நடைமுறையே ஆகும். அன்பிற்கும் பாசத்திற்கும் ஆட்பட்டு உண்மைக்கு மாறாக நடந்து கொண்டு கடைசியில் ஊர் சிரிக்க, பேர் கெட்ட பேர்வழிகள் பலரை கண்ட வித்தகன் விதுரன், தானும் அதில் ஒன்றாக விளங்கப்போவதை எண்ணி மனம் வருந்தும் உணர்வை பாரதி என்ற பல்சுவை பகலவன் எடுத்துக் காட்டும் அழகே தனி.

பாண்டவர்களை அழைத்து, தாம் கட்டிய மணி மண்டபத்தைக் காட்டும் சாக்கில் அவர்களின் நல்வாழ்வை வேருடன் தோண்டும் விதமாக, நடக்கப்போகும் சூதாட்டத்தை பற்றியும் சூட்சகமாக சுற்றி வளைத்து பேசி ஒப்புதல் வாங்கிவரும் தப்பான செயலிற்கு எப்போதும் மதிக்கும் அண்ணனால் அனுப்பப்பட்ட விதுரன், பாண்டவர் பூமியின் அழகையும் வளத்தையும் கண்டு வியந்து போற்றுவதாகவே இப்பாடல் முழுவதும் படைத்திருப்பது ஏன் என்ற ஐயத்திற்கு விடையாக இறுதி இரண்டு வரிகள் அமைந்திருக்கின்றன.

இத்தனைச்சிறப்புகள் வாய்ந்த இந்த பாரத திரு நாட்டின் நாசத்திற்கு துணைபோகும் மோசமான பாவியாக மாறும் பாங்கினை நொந்து விதுரன் வெளிப்படுத்தும் உணர்ச்சியினை "பாரதர் தந் நாட்டிலே நாசமெய்தப் பாவியேன் துணை புரியும் பான்மையென்னே" என்ற வரிகள் மூலம் பாரதி காட்டும் நுட்பம் வேறு எவரும் பயிலாத கலையாகும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் எழுதிய இவ்வரிகள் விதியை நொந்துகொண்டு பிற வழியில்லாமல் ஆங்கிலேயேருக்கு துணை நின்ற பொதுமக்களையும் குறிப்பிடுவதாக கொள்வோரும் உண்டு.

விதுரன் தூது செல்லுதல்

'நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு,
நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு,
கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங்
குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு,
ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்
பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு
பண்ணவர்போல மக்களெலாம் பயிலும் நாடு,

'அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர
அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும்
காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல்
பொன்னங்க மணிமடவார் மாட மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச,
வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ,மாதர்
மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு,

'பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு,
பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும் நாடு, வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
கேள்விஎனும் இவையெல்லாம் விளங்கு நாடு,
சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு,
தொல்லுலகின் முடிமணிபோல் தோன்று நாடு,
பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப்
பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே!'

ஸ்ரீமத் பாகவதம் மரணம் உன்னைக் கண்டு பயப்படும்



Designed and maintained by AKR Consultants