Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT68 Brahmin Today - October 2009 பிராமின் டுடே - அக்டோபர் 2009     அட்டவணை






The Magazine for Brahmins




எந்தையும் தாயும்

நகர் பிராமணர்கள்

தற்கால ஆராய்ச்சியாளர்கள் அட்டக் எனப்படும் லடாக் பகுதியிலிருந்து இவர்கள் வந்ததாகக் கூறுகிறார்கள். சிவப்பெருமானால் ‘நகர்’ பிராமணர்களுக்குத் தானமாக லடாக் பகுதி கொடுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அங்குள்ள இறைவனின் பெயர் அட்டகேஷ்வர் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.

இது தவிர கூறப்படும் ஒரு குறிப்பின்படி அனார்த்த என்ற மன்னன் செமத்கர்பூர் என்ற பாழடைந்த நகரத்தைச் சீரமைத்து அங்கு ஒரு அடகேஸ்வர் ஆலயத்தைக் கட்டியதாகவும் அந்நகர்தான் பின்னாளில் வட் நகர் என்று மாறியதாகவும் கூறப்படுகிறது. வட் நகரில் வசித்தவர்கள் நகர் பிராமணர்கள் என்றும் பின்னர் அந்த நகரம் ஆக்கிரமிக்கப்பட்டபோது நகர் பிராமணர்கள் ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் வந்து குடியேறியதாகவும் குஜராத் மாநிலத்தில் குலம் பெயர்ந்ததன் காரணமாகக் கூறப்படுகின்றன.

புகழ்பெற்ற சில நகர் பிராமணர்கள்

நிர்வாகத் திறமை மிக்க நகர் பிராமணர்கள் இசை நுண்கலை போன்ற பல துறைகளில் திறமை மிக்கவர்களாக விளங்குகிறார்கள்.

1. பிரியா காந்த் நகர்: சிறந்த வேத விற்பன்னராகவும் சீரிய சிந்தனை உடைய நிர்வாக ஸ்த்தராகவும் திகழ்ந்த இவர் நகர் பிராமணர்கள் எப்போதும் ஒரு கர்ஷி (சிறந்த சமையல்காரர்), ஒரு பர்ஷி (சிறந்த போர்வீரர்) மற்றும் கலாம் (சிறந்த எழுத்தாளர்) ஆகிய மூவருமாக விளங்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

2. ஸ்ரீ அவினாஷ்வியாஸ்: சிறந்த இசையமைப்பாளர் குஜராத் மெல்லிசை இயக்கத்தின் முன்னோடி மற்றும் கர்பா இசையில் பல பாடல்களை இயற்றியவர்.

3. அன்சுல் நகர்: கலை விமர்சகர் உலகம் முழுவதும் இந்திய கலை, கலாச்சாரங்களைப் பரவச் செய்தவர். கலைக்கூடங்களை நிறுவியவர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்.

4. சர் ப்ரபாஷங்கர் பட்டானி : பாவு நகர் சமஸ்தானத்தின் தீவானாகத் திகழ்ந்தவர்.

5. கவிகாந்த்: புகழ்பெற்ற குஜராத்திய மொழி கவிஞர்

6. பரேஷ் ராவல்: புகழ்பெற்ற குஜராத்தி மற்றும் இந்தி நடிகர்

7. மகேஷ்பட்: திரைப்பட இயக்குநர்

8. பூஜாபட்: திரைப்பட நடிகை.

இவர்கள் தவிர புகழ்பெற்ற பாடகர் விபா தேசாய் மற்றும் ரஷிபரி தேசாய், இசையமைப்பாளர் கவுரங் வியாஸ், குஜராத்தி நாடக ஆசிரியர் டாக்டர் சதீஷ் வியாஸ், தொலைக்காட்சி நடிகர் தினேஷ் சுக்லா, கவிஞர், ஓவியர், பாடகர், இசையமைப்பாளர் ஜகதீப் விரானி, கட்டடக்கலை நிபுணர் சிந்தன் விரானி, மருத்துவ நிபுணர் புல்கிட் விரானி, புகழ்பெற்ற பின்னணி பாடகி அல்காயாகினிக், பாடகர் உதய் மஜ்ஜிந்தார், தலோ கலைஞர் விஷால் நகர் அரிதான டார்க் ஷெனாய் கலைஞர், பண்டிட் வினாயக் ஓரா, டேபிள் டென்னீஸ் வீரர் ருச்சித் நகர், பிரபல சரித்திர ஆசிரியர் ஸி. பீம்ராவ் ஜோட்டே, காந்தியவாதி தனது 88 வயதிலும் சைக்கிளில் வந்து சமூக சேவை செய்யும் திரு. அரிகாந்தர தேசாய், இசைப் பாடகர் பிலிப் தேசாய் ஆகிய பல புகழ்பெற்ற நகர் பிராமணர்கள் பட்டியலில் முதன்மையிடம் பெறும் ஒரு முனிவரும் உண்டு. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த “வைஷ்ணவ ஜனத்தோ தேனே கஹியே” என்ற பாடலை இயற்றிய நரசிங் மேத்தா என்ற நகர் பிராமணக் கவி முனி ஆவார். கி.பி (1414-1481) கால கட்டத்தில் வசித்த இவர் இயற்றிய இப்பாடலில் ஒரு உண்மையான வைஷ்ணவன் மற்றவர்கள் துன்பத்தைக் கண்டு வருந்துபவனாகவும் தான் செய்த நன்மையைப் பெருமையாக நினைக்காதவனாகவும் மது, மாது, செல்வம் ஆகியவற்றில் ஆசை இல்லாதவனாகவும் இருக்க வேண்டுமென்று எழுதிய இந்தப் பாடல் போலவே நகர் பிராமணர்களும் புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

(தொடரும்)

மரணம் உன்னைக் கண்டு பயப்படும் வாசகன் ஒருவனின் வேண்டுகோள்



Designed and maintained by AKR Consultants