Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT88 Brahmin Today - June 2011 பிராமின் டுடே - ஜூன் 2011     அட்டவணை






The Magazine for Brahmins




ஜானகிராமன்

சந்திரஜித்தின் தம்பி பிரசேனன் என்பவன் ஸ்யமந்தகமணியை அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு சிங்கம் அவனை அடித்துக் கொன்றுவிட்டது. ஸ்யமந்தகமணியுடன் பிணமாகக் கிடந்த பிரசேனனைத் தின்றுகொண்டிருந்தது. அந்த வழியே வந்த ஜாம்பவான் இதைக் கண்டு அந்த சிங்கத்தைக் கொன்று அந்த ஸ்யமந்தக மணியைத் தனது அழகான மகள் ஜாம்பவதிக்கு அளித்தார். ஜாம்பவதி கிருஷ்ணரிடம் அபார பக்தி கொண்டவள். அவரையே மணம் புரிய வேண்டும் என எண்ணியவள்.

இதற்கிடையில் சந்திரஜித் ஸ்யமந்தக மணியை கிருஷ்ணரின் அறிவுரைக்கு ஏற்பக் கொடுக்காததால் கிருஷ்ணரே தன் தம்பி பிரசேனனைக் கொன்று மணியை அபகரித்துக்கொண்டதாக வதந்தியைப் பரப்பினான். இதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணர் மிகவும் வேதனைப்பட்டார். எப்படியாவது ஸ்யமந்தக மணியைக் கண்டுபிடித்து சந்திரஜித்திடம் ஒப்படைத்துத் தனக்கு வந்த பழியைப் போக்கிக்கொள்ள வேண்டுமென நினைத்தார்.

சந்திரஜித்தின் தம்பி அந்த மணியை அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றது, சிங்கம் அடித்துக் கொன்றதையும் தெரிந்து கொண்டு வேட்டைக்குப் புறப்பட்டார் கண்ணன்.

சந்திரஜித்தின் தம்பியைத் தேடிக் காட்டிற்குப் புறப்பட்ட கிருஷ்ணர் அங்கு பிரசேனனும் ஒரு சிங்கமும் ஒரு குகைக்கருகில் இறந்து கிடப்பதைக் கண்டார். அந்த மணி பிரசேனனிடம் இல்லாததையும் கண்டார்.

கண்ணன் ஜாம்பவானை வென்று ஸ்யமந்தக மணியை சந்திரஜித்திடம் ஒப்படைத்தல்

உடனே அருகில் இருந்த குகைக்குள் சென்றார். அங்கு ஒரு வயதான கரடி மன்னன் இருப்பதையும் அவனது அழகான மகள் ஸ்யமந்தகமணியை அணிந்திருப்பதையும் கண்டார். அந்த மன்னன் ஜாம்பவான் என கிருஷ்ணர் அறியவில்லை. அந்த மாலையை அந்தக் கரடி தராததால் அக்கரடியுடன் கடுமையாக மோதினார்.

யாருக்கும் சளைக்காத ஜாம்பவான் கிருஷ்ணரின் தாக்குதலில் நிலை குலைந்து போனான். ‘என்னை இவ்வளவு வலுவாகத் தாக்கக்கூடியவர் ஸ்ரீராமர் ஒருவர்தானே. ஆனால் இந்த வீரன் கடுமையாகத் தாக்குகிறானே’ என்று எண்ணியவுடன் ஜாம்பவான் கண்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமராகவே தோன்றினார். ஜாம்பவான் “நீங்கள் சாதாரண மனிதர் இல்லை. எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணன் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார். கிருஷ்ணர் ‘நண்பரே! நீர் நினைப்பது சரி நான் ஸ்ரீமன் நாராயணனின் ஸ்ரீராமாவதாரத்திற்கு அடுத்த அவதாரம். என் பெயர் கிருஷ்ணன் என்றான்.”

ஜாம்பவான் மிக மகிழ்ந்து ஸ்யமந்தக மணியையும் தனது புத்திரி ஜாம்பவதியையும் கிருஷ்ணரிடம் சமர்ப்பித்தார். கிருஷ்ணர் ஜாம்பவதியை மணந்துகொண்டு, ஸ்யமந்தக மணியை சந்திரஜித்திடம் ஒப்படைத்தார்.

எல்லா விவரங்களையும் அறிந்த சந்திரஜித், கிருஷ்ணரின் மேல் அபாண்டமாகப் பழி போட்டதற்கு மிக வருந்தி, ஸ்யமந்தகமணியை அவரிடமே திருப்பிக்கொடுத்து, தான் செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தமாகத் தன் மகள் சத்தியபாமாவையும் கண்ணனிடம் ஒப்படைத்தார். சத்தியபாமாவை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணர், ஸ்யமந்தகமணியைத் திரும்பவும் சந்திரஜித்திடம் கொடுத்து “சூரிய பகவானின் சிறந்த நண்பராகிய உங்களிடமே இந்த இரத்தினம் இருக்கட்டும். அதன் பயன் இந்த நாடு, மக்களுக்கு எல்லாம் கிடைக்கட்டும்” என்று கூறி விடைபெற்றார்.

ஸ்யமந்தகமணி அக்ரூரருக்குக் கிடைத்தல்

சததன்வா என்பவன் சந்திரஜித்தைக் கொன்று ஸ்யமந்தகமணியை அபகரித்துச் சென்றான். திடீரென்று, அவனுக்கு கிருஷ்ணனுக்கு இது தெரியவந்தால் தன்னைக் கொன்று ரத்தினத்தை மீட்டுவிடுவான் என்ற பயம் ஏற்படவே, ஸ்யமந்தகமணியை அக்ரூரரிடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.

அக்ரூரர் கிருஷ்ணரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பரம பக்தர். கிருஷ்ணர் சார்பில் பாண்டவர்களின் நலத்தை அறிய தூது சென்ற உத்தமர். அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

உடனே ஸ்யமந்தகமணியை கிருஷ்ணரிடம் ஒப்படைத்திருக்க வேண்டாமா? ஆனால் செய்யவில்லை. ஸ்யமந்தகமணி அளிக்கும் செல்வம் அவர் கண்ணை மறைத்துவிட்டது. அக்ரூரர் ஸ்யமந்தகமணியை எடுத்துக்கொண்டு துவாரகையை விட்டு வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டார். செல்வச் செருக்கு எத்தனை பண்பு உள்ள மனிதனையும், கெட்டவனாக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

ஸ்யமந்தகமணியை அக்ரூரர் கிருஷ்ணரிடம் ஒப்படைத்தல்

சந்திரஜித்தை சததன்வா கொன்று ஸ்யமந்தகமணி திருடிச் செல்லப்பட்டது என்பதை அறிந்த கிருஷ்ணர் அவனைத் தேடிச் சென்று வதம் செய்தார். ஆனால் அவனிடம் ஸ்யமந்தகமணி இல்லை. அந்த ரத்னம் அக்ரூரரிடம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று கிருஷ்ணருக்குத் தெரிய வந்தது. அக்ரூரரை அழைத்து வருமாறு ஆட்களை கிருஷ்ணர் அனுப்பினார்.

செல்வம் தன் மதியை மயங்கச் செய்துவிட்டதற்காக மிகவும் வருத்தப்பட்ட அக்ரூரர், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்து, ஸ்யமந்தகமணியை கிருஷ்ணரின் காலடியில் சமர்ப்பித்து நெடுஞ்சரண் கிடையாக விழுந்து விம்மி விம்மி அழுதார்.

“கிருஷ்ணா! நான் மதியிழந்து இழிந்த காரியம் செய்துவிட்டேன். தயவுசெய்து மன்னிக்கவும்” என்று கெஞ்சினார்.

கிருஷ்ணர் அவரைச் சமாதானப்படுத்தி “நீங்கள் உங்கள் தவறை உணர்ந்துவிட்டதால் உங்களை மன்னிக்கிறேன்” என்று கூறி ஸ்யமந்தகமணியை பெற்றுக்கொண்டார்.

தூதர்கள் வந்து கிருஷ்ணரைச் சந்தித்து விஷயத்தைக் கூறுதல்

முன்பின் தெரியாத ஒருவன் கிருஷ்ணரின் சபைக்கு வந்து ‘ஜராசந்தன் பல அரசர்களைச் சிறைப்படுத்தி கொடுமை செய்வதாகவும் அந்த அரசர்களின் தூதனாகத் தான் வந்திருப்பதாகவும் தெரிவித்தான். அந்த அரசர்கள் கிருஷ்ணர் வந்து ஜராசந்தனை வென்று தங்கள் துன்பத்தைப் போக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறார்கள். என்பதைச் சொல்லவே நான் இங்கு வந்தேன்’ என்றான்.

அந்தத் தூதன் இருக்கும்போதே இன்னொரு தூதனும் அங்கு வந்தான். ‘ஐயா பாண்டவர்கள் ராஜசூய யாகம் நடத்த விரும்புகிறார்கள். தாங்கள் வந்து அதை நடத்தித் தந்து சிறப்பிக்க வேண்டுமென்று அவர்களது விருப்பத்தைக் கூறவே நான் இங்கு அனுப்பப்பட்டேன்’ என்றான்.

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  



சூர்ய நமஸ்காரம் பாரதி பக்கம்



Designed and maintained by AKR Consultants