Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:27224947
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT95 Brahmin Today - January 2012 பிராமின் டுடே - ஜனவரி 2012     அட்டவணை






The Magazine for Brahmins




நிகழ்வுகள்

திருச்சியில் நடந்த தீர்க்கத்தரிசிகள் விழா

பாரதி என்ற மஹாகவியின் ஒவ்வொரு எழுத்தையும் மீண்டும் மீண்டும் இவ்விலகிற்கு எடுத்துச் சொல்லும் சாரதிகள் அனேகர் உளர். தமிழ்மொழியை நேசிக்கும் கோடிக் கணக்கான உள்ளங்களில் ஒன்றாகத் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ‘அக்னிகுஞ்சு’ மாத இதழ் சார்பாக அண்மையில் திருச்சியில் நடந்த பாரதி மற்றும் இராஜாஜி பட திறப்பு விழா இவ்வருடம் (25-12-2011) மிகச் சிறப்பாக அமைந்ததற்கு ஒரு காரணம் இருந்தது.

இந்திய சுதந்திர வரலாற்றின் ஆயுதம் தாங்கிய முதல் தமிழ் அந்தணன் என்ற பெருமைக்குரிய வீர வாஞ்சிநாதன் பற்றிய எளிய மற்றும் விளக்கமான புத்தகம் இதுவரை வெளிவந்ததில்லை. இந்த வரலாற்று பிழையை சமன் செய்யும் விதமாக, சின்னை. வெங்கட்ராமன் (ஆசிரியர்: அக்னிகுஞ்சு) அவர்கள் எழுதிய உரைநடை உயிரோட்டம் அன்று புத்தக வெளியீடாக ஒரு புது வடிவம் கொண்டது.

வாஞ்சிநாதன் புகழ் பாடும் இந்த வரலாற்று ஆவணத்திற்கு அணிந்துரை எழுதி தன் ஆதரவு காட்டியிருக்கும் “பிராமின் டுடே” ஆசிரியர் இவ்விழாவில் கலந்துகொண்டு, இராஜாஜி உருவ படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

சுதேசி மாத இதழ் ஆசிரியர் திருமதி. பத்மினி ரவிச்சந்திரன், சம்ஸ்கிருத பாரதி திருச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. ரங்கராஜன், திரு. மழபாடிராஜாராம், திரு. அகஸ்தியர், கோபாலகிருஷ்ணன், புலவர். நாராயணன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்த இவ்விழாவில் சின்னை. வெங்கட்ராமன் எழுதி, இயக்கிய பாரதி வில்லுப்பாட்டு நிகழச்சி மற்றும் சிறுமி. ஜனனி ஒப்பித்த பாரதியின் பாடல்கள் அகியவை மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றன.

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  



Biography Of Sri Thyagaraja Swami பாரதி பக்கம்



Designed and maintained by AKR Consultants