- The Magazine for Brahmins
எந்தையும் தாயும்
பஞ்ச திராவிடர் பிராமணர்கள்
தேஸாத் பிராமனர்கள்
ஆனால் தேஸஸ்த் பிராமணர்களது சரித்திரம் 8ஆம் நூற்றாண்டிலிருந்து செம்மையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
ஸம்ஸ்கிருத மொழியில் வல்லுநர்களாக இன்றுவரை திகழும் இந்தப் பிராமணர்கள் உலகிற்கு அளித்துள்ள அறிவுக் கொடை அளப்பரியது.
கலை, காவியம் போன்ற நுண்கலைகளில் மட்டுமின்றித் தற்காலத்தில்தான் மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கணிதம், வான் இயல் ஆகிய துறைகளிலும் பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்து இவர்கள் எழுதியுள்ளர்கள்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை ஸம்ஸ்கிருத மொழியையே தங்களது தாய்மொழியாகக் கொண்டிருந்த தேஸாத் பிராமணர்கள் பின்னர் அவர்கள் வசித்த பிரதேசத்தில் தோன்றிய மராத்தி மொழியைத் தங்கள் தாய்மொழியாக ஸ்வீகரித்து அதை வளமுள்ள வாழும் மொழியாக்கினார்கள். இன்று மற்ற எல்லா இந்திய மொழிகளைவிடவும் மராத்திய மொழியில் மிக அதிக அளவில் ஸம்ஸ்கிருத சொற்களும் பிரயோகங்களும் இருப்பதன் முக்கியக் காரணம் தேஸாத் பிராமணர்களே.
8ஆம் நூற்றாண்டில் பவபூதி இயற்றிய மகாவீர் சரித்திர மற்றும் மாலதி மாதவ ஆகிய இரு ஸம்ஸ்கிருத படைப்புகள், காளிதாசன் படைத்த சாகுந்தல காவியத்துடன் ஒப்பிடப்படுகின்றன. பகவான் ராமனின் பெருமைகளைப் பற்றிப் பேசும் புராண நூலாக மகாவீர் சரித்திர விளங்குகிறது. ஆனால் அக்காலத்தில் அதிகம் எழுதப்படாத காதல் கதையாக, மாலதி மற்றும் மாதவன் என்னும் சாமான்யர்களின் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களுடன் கூடிய சமூக நாவலாக மாலதி மாதவ விளங்குகின்றது.
மராத்திய மொழியின் முதல் கவி என்ற பெருமைக்கு உரியவராகத் திகழும் முல்க்ராஜ் என்ற தேஸாத் பிராமணர் எழுதிய விவேக-சித்தி என்னும் மராட்டியின் முதல் இலக்கியம் வேதாந்த விஷயத்தைப் பற்றியது.
தொடரும்
