Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை






The Magazine for Brahmins




பிரியமுள்ள பிராமணச் சொந்தங்களே!

ஆவணி அவிட்டச் சிறப்பிதழாக அமைந்த சென்ற மாத கட்டுரைகளில் நாம் பாடிய லாவணியைப் புகழ்ந்தும் விமர்ச்சித்தும் எதிர்வினை புரிந்த எல்லா வாசகர்களுக்கும் முதற்கண் நம் நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம்.

மும்பையில் ஜூலை 13 அன்று சிறப்பாக நடந்த பிராமின் டுடே இதழின் 125ஆவது இதழ் வெளியீட்டு விழா நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் விளக்கமாகவும் விரிவாகவும் சென்ற இதழில் இடம் பெற்றிருந்ததாக, விழாவிற்கு வர இயலாதவர்கள் மட்டும் அல்லாது, விழாவில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் கூட, நம்மோடு தொடர்புகொண்டு அஞ்சல், மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றின் மூலம் அளித்த அன்பும் ஆதரவும் இது போன்ற பல சாதனைகளை நாம் செம்மையாக நிறைவடையச் செய்ய பெரிதும் உதவும்.

இம்மாத முகப்புத் தலைப்பு ஆங்கிலத்தில் சொல்லுவது போல, 'Special, in more than one aspect' என்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. மாறிவரும் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி தங்களை மாற்றிகொள்வதாகக் கருதிக் கொண்டு, காத்து வந்த பிராமணக் கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விடுவதற்கு, இளைஞர்களைவிட அவர்களின் பெற்றோர்கள் மனதளவில் தயாரகி வருவது வருந்ததக்கது என்பதே இக்கட்டுரையின் சாரம்சமாகும்.

‘நாமம் கிண்டலுக்குரியதா’ என்ற தலைப்பில், சென்ற சில இதழ்களுக்கு முன்னர், பிராமின் டுடேயில் தொடர்ந்து எழுதிவரும் ஆர்யத் தமிழன் எழுதிய சிறந்த ஆய்வு கட்டுரை, வெகு காலமாக பலர் வெளிப்படுத்திவரும் ஒரு சிந்தனையை மைய்யமாக கொண்டதே.

இதுபற்றி ஒரு உபந்யாசகர் ஒரு தொலைகாட்சியில் கூறியதன் தொடர்பாக நம் சக பத்திரிகையாளர் திரு. ஸ்ரீனிவாசன், அவர் ஆசிரியராக விளங்கும் ஆதிப்பிரான் இதழில் மறுப்பு கருத்துக்கள் சில உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

சரியாகவோ, தவறாகவோ, சமூகத்தில் பெரிதும் பேச்சு வழக்கில் உள்ள ஒரு சொல்லாடையைப் பற்றிய ‘மறு பக்கம்’ என்ற அளவில் (மட்டுமே) நாம் அந்த கட்டுரையை வழக்கமாக ஒரு சக இதழாளருக்கு தரப்படும் முகமன் மதிப்புரையுடன் வெளியிட்டது பத்திரிகை தர்ம கோட்பாட்டிற்குட்பட்டதே.

இந்தக் கட்டுரையை மட்டும் அன்றி, அதை வெளியிட்ட நம்மையும் கண்டணம் செய்து, பக்கத்திற்கு பக்கம் உக்கிரமாக தன் உள்ள கிடைக்கையை வெளிப்படுதிய பலருக்கு, குறிப்பாக, குரோம்பேட்டை திரு. வெங்கடசேன், இரும்பாநாடு ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி, ஸ்ரீரங்கம் திரு. ஜகந்நாதன் ஆகியோருக்கு நம் நன்றியறிதலை தெரிவித்துகொள்கிறோம்.

நம் இதழில், வேறு ஒரு இதழாசிரியர் எழுதும் கட்டுரை அம்சங்களை மிக கடுமையாக கண்டணம் செய்யும் உரிமையையும் வாய்ப்பையையும் வாசகர்களுக்கு வழங்குவதை பெருமையாக கருதி மகிழ்ச்சியடையும் அதே வேளையில், அந்த கண்டணங்கள் சிலவற்றில் இருந்த, தனிப்பட்ட, தனி நபர் தாக்குதலை கண்டு மனம் வருந்துகிறோம்.

உணர்வு பூர்வமாக எழுதுவதும், உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதும் வெவ்வேறானவை என்பதை கொள்கையாகக் கொள்ளுமாறு பிராமின் டுடே வாசகர்களை வேண்டிக்கொள்கிறோம்.

வழக்கமான நம் பகுதிகளான பாரதி பக்கம், கைத்தலம் பற்ற, எந்தையும் தாயும், அரைபக்க அவியல், போன்றவற்றுடன் ஸூர்ய பகவான்-காயத்ரி மந்திரம் கட்டுரையின் நிறைவு பகுதியும், மும்பை விஜயத்தின் இறுதி பகுதியும் இவ்விதழில் வெளிவருகிறது.


பிராமணர்களும் கலப்புத் திருமணங்களும்



Designed and maintained by AKR Consultants