Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com

  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை


The Magazine for Brahmins
Spark

மும்பை தர்ஷன் தொடர்ச்சி & கோலாப்பூர் விஜயம்

(14.07.2014. திங்கள். கோலாப்பூர்)

சென்ற இதழில் ஓரளவிற்கு நன்றாகவே இருந்தது என பலர் பாராட்டுப்படி எழுதப்­பட்டிருந்த மும்பை தர்ஷன் என்ற மும்பையை சுற்றி பார்க்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக 14-07-2014 அன்று இரவு நமது 23 பேர் அடங்கிய நமது குழு அடுத்து சென்றடைந்த இடம் சரித்திர புகழ்பெற்ற கோலாப்பூர் ஆகும்.

பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நச, நச என பெய்து கொண்டிருந்த அருமையான மழை சூழலில் காலை 8 மணி அளவில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருந்த யாத்ரி நிவாஸுக்கு சென்று குளித்துவிட்டு, கோலாப்பூர் மஹாலட்சுமியை கும்பிட சென்ற அனுபவம் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் விதம் அமைந்திருந்தது அந்த கடந்த கால கற்கோவில் நாம் சாதாரணமாக வடஇந்தியாவில் காணும் சாதாரண மற்றும் சாமான்ய வகை சார்ந்தது அல்ல.

மராட்டிய பேரரசின் மகத்தான சக்தியாக விளங்கிய சிவாஜி மன்னனின் குலத்தெய்வமாக விளங்கிய அன்னை மஹாலட்சுமி வீற்றிருக்கும் மாபெரும் கோயில் அது. தொன்மையான கலை நுட்பம் மிகுந்த கல்தூண்கள் பல உயர்ந்து நிற்கும் இந்த ஆலயம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவது பாராட்டுதல்குரியது.

கோலாப்பூர் நகரத்தைப் பற்றி சொல்வதென்றால், 'அது ஒரு சின்ன தஞ்சாவூர்' என்று சொல்ல வேண்டும். மராட்டிய மன்னர்கள் கட்டிய கோட்டை, கொத்தளங்களுடன் கூடிய பல தெருக்களுடன் விளங்கும் இந்த இரு நகரங்களும் ஒரு காலத்தில் புகழ்பெற்ற கலாச்சார மையங்களாக திகழ்ந்தன. தற்போது செல்வாக்கு இழந்து சீரழிந்துவிட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போலவே, ஒரு காலத்தில் கோலாப்பூர் செருப்புகளும் புகழ்பெற்று விளங்கியது. கலை வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த இரு பொருட்களும் புகழின் உச்சியில் இருந்தபொழுது அவற்றை வாங்குவதற்கென்றே இரு ஊர்களுக்கும் பலர் வந்து போவார்கள்.

சங்கடஹர சதுர்த்தி புண்ணியதினம் ஆகையால் நாம் சென்ற தினத்தில் மழையையும் பொருட்படுத்தாது கோலாப்பூர் மஹாலட்சுமி கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது.

நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தனது வண்ண பட்டாடையை மாற்றி, நாள் முழுவதும் புதுப்புது வண்ணச் சேலையில் காட்சி அளிக்கும் மஹாலட்சுமியை அன்று நிதானமாகத் தரிசனம் செய்யும் வாய்ப்பு நமக்கு கிட்டாவிடினும், கிடைத்த தரிசனம் எல்லோருக்கும் மன நிறைவை அளிக்கும் விதமாகவே இருந்தது.

ஆச்சாரமான மராட்டிய பிராமணர்கள் மட்டுமின்றி கன்னட, துளு பிராமணர்களும் அதிகம் வசிக்கும் கோலாப்பூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள உத்ராதி மடத்தில் அன்றைய மதிய உணவு அருந்தும் நல் வாய்ப்பு நமக்கு கிடைத்தது.

மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரா மடத்தில் கோலாப்பூர் கிளையாக விளங்கும் உத்ராதி மடத்தில் நாம் உண்ட அன்றைய உணவு அசாதாரணமானது. உச்சக்கட்டப் பிராமண ஆச்சாரத்தை தனது உயிர் மூச்சாக கொண்டுள்ள, மாத்வ பிரமாண மடங்களில் சுவாமிக்கு உச்சிகால பூஜை முடியும் முன்பு எந்த உணவும் அருந்த முடியாது. பொதுவாக மற்ற இடங்களில் உள்ள அந்த நடைமுறைகள் மட்டுமின்றி, ஆச்சார குறைவாகக் கருதப்படும் கேஸ் அடுப்பு, அல்லது எலக்ட்ரிக் அடுப்பைகூட பயன்படுத்தாது, முழுக்க முழுக்க அடுப்பு கரியில் இயங்கும் இரண்டு பெரிய குமுட்டி அடுப்புகளில் சட்டை அணியாத பிராமணர்கள் தயார் செய்த உணவை அருந்தும் போது, அதனுடைய மற்ற ருசிகளுடன் நாம் இழுந்துவிட்ட பிராமண ஆச்சார ருசியும் கலந்திருந்ததை அன்று அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டார்கள்.

சாதூர்மாஸ்யம் தொடங்கி சில நாட்களே ஆகியிருந்த அத்தருணத்தில், சாதூர்மாஸ்ய விரத அனுஷ்டான கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப அன்றைய சமையலில் எந்தக் காய்கறிகளும் சேர்க்கப்படவில்லை. ‘சாரு’ என்ற கன்னட சாம்பார், ரசம், சில தானியங்களால் செய்த கூட்டு, மோர்க்குழம்பு, மற்றும் பாயசம் ஆகியவை மட்டுமே உள்ளடக்கிய அந்தப் போஜனத்தில் அறுசுவை இல்லாவிடினும் ஆச்சார நறுசுவை மேலோங்கி இருந்ததன் பொருட்டு அனைவரும் மனநிறைவு அடைந்தனர்.

கோலாப்பூர் இரயில் நிலையத்திலிருந்து 3:30 மணிக்கு தொடங்கிய நம் பயணம் பூனாவில் இரவு 11 மணிக்கு முடியும் வரை இடையில் வந்துபோன ஊர்களையும் கண்டு களித்த காட்சிகளையும் பற்றி இங்கு சற்று குறிப்பிடுவது அவசியம். மஹாராஷ்டிராவின் 'சுகர்பெல்ட்' என்று அறியப்படும் கோலாப்பூர், பூனா பிரதேசங்களில் இருப்புப் பாதையின் இரு புறமும் கண்ணுக்கு எட்டியவரை நாம் கண்டது கரும்பு தோட்டங்களும் ‘கார்கானா’ என்று மராட்டியில் கூறப்படும் தொழிற்சாலைகளும் மட்டுமே ஆகும். 'சோழநாடு சோறு உடைத்து’ என்ற வாக்கிற்கு ஏற்ப, நெல் வயல்கள் சூழ்ந்திருந்த தஞ்சை மாவட்டம், இன்று வெறும் தரைகளில் கோடுபோட்டு வீட்டு மனை, Layout என்று விளம்பரம் போர்டு வைக்கப்பட்டிருக்கும் புஞ்சை காடாக ஆகிக்கொண்டிருக்கும் கொடுமையைப் பார்க்க நேரிடும் நம் நெஞ்சங்களுக்கு அந்த கோலாப்பூர் காட்சிகள் அற்புதமாகத் தோன்றின.

கிர்லோஸ்கர், தாண்டேக்கர் போன்ற பெரிய பெரிய பிராமணத் தொழிலதிபர்கள் இயற்கை மாசுபடாமல் இங்கு நிறுவி இருக்கும் ஏராளமான தொழிற்சாலைகளும் அதற்கு அருகில் அமைந்திருக்கும் சிறிய சிறிய இரயில் நிலையங்களும், இடைஇடையே ஏறி இறங்கும் நாம் புரிந்து ரசித்த மராட்டிய மொழியில் பேசி பொழுதை கழித்த எண்ணற்ற மக்களும் நமது இந்த பயணத்தை மகிழ்ச்சிகரமாக ஆக்கின.

சென்னை, மும்பை போன்ற முக்கிய வழிதடங்களில் பேண்ட்ரி கார் என்ற வசதியை வைத்திருப்பதாக கூறி, ஒரு சிறிதும் ருசியற்ற உணவை 100 ரூபாய்க்கு விற்று, நம் உள்ளத்து எரிச்சலை கிளப்பும் பின்னணியில், கோலாப்பூர், பூனா வழித்தடத்தில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்த அருமையான உணவு வெறும் 50 ரூபாய்க்கு கிடைத்தது என்ற முத்தாய்ப்புடன் முடிக்கிறோம், பிராமின் டுடே 125வது இதழ் வெளியீட்டு விழா தொடர்பான மும்பை மற்றும் கோலாப்பூர் விஜய காதையை.


Brahmins and Inter-Caste Marriages பாரதி பக்கம்Designed and maintained by AKR Consultants