Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை






The Magazine for Brahmins




காயத்ரி மந்த்ரம் - ஸூர்யபகவான் ஒரு ஸம்பந்தம்

பேராசிரியர் சங்கர நாராயணன் - களக்காடு

பூமி, சந்திரன் மற்ற கிரஹங்கள் அமைந்த மண்டலத்திற்கே ஒரு நாயகமாகத் திகழ்ந்து ஒளியூட்டுகிறது. வெப்பம், தட்பம் முதலிய நிலைகளை ஏற்படுத்தி, பூமியில் மழை பொழியச் செய்து புல், பூண்டு, மரம், செடி, கொடிகளுக்கு உயிர்சத்துக் கொடுத்துச் செழிக்கச் செய்து, அனைத்து உயிர்களுக்கும் வாழ்வாதாரமாகச் செயல்படுகிறார் ஸுர்யபகவான். இதில் யாருக்கும், எந்த நிலையிலும் பாகுபாடில்லை. அவர் பரமாத்மாவைப்போல எல்லோருக்கும் உயிர் கொடுத்துத் தனது ஸர்வாத்மகத்தையும், ஸர்வேந்தர்யாமித்வதிதையும் (University) கொண்டிருக்கிறார். பரமாத்மாவானவர். இந்தக் கருத்து நமகத்தின் (ருத்ரம்) முதன் அனுவாகத்தில் ‘உதைதனம் கோபா அத்ருசன் அத்ருசன் உதஹார்ய:!

உதைதனம் விஸ்வா பூதானி ஸத்ருஷ்டோ ம்ருடயாதின:!’ அதிகாலையில் மாடு மேய்க்கும் இடையர்களுக்கு குடத்தில் நீர்சுமக்கும் படிப்பறிவில்லாத பெண்களுக்கும் ஸீர்யன் தென்படுகிறார். காலை நேரத்தின் இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் வெளிப்படுகிறார். பரமாத்மாவினுடைய செயல்களை அவரும் செய்கிறார். மேலும் ப்ரமாத்மாவைப்போலவே, வேதரூபமாக விளங்குகிறார் என்கிறது ‘மஹாநாராயண உபநிஷத்’.

“ஆதித்யோ வா ஏஷ ஏதன் மண்டலம் தபதி தத்ரதா ருசஸ் தத்ருசோ மண்டலகும் ஸ்ருசாம் லோகா (அ)தய ஏஷ ஏதஸ்மின் மண்டலே (அ)ர்ச்சிர் தீப்யதே தானி ஸாமானி ஸ ஸாம்நாம் லோகோ (அ) தய ‘ஏஷ ஏதஸ்மின் மண்டலே (அ)ர்ச்சிஷி புருஷஸ்தானி யஜீகும்ஷி ஸயஜீஷா மண்டலகும் ஸயஜீஷம் லோகஸ்ஸைஷாத் த்ரையேவ வித்யா தபதி ய ஏஷோ: அந்தராதித்யே ஹிரண்மய” புருஷ:”

இதில் கடைசிக் சொல்லாக வரக்கூடிய புருஷ: என்பது எக்காலத்தும் நினைவிலிருந்து நீங்காத்தன்மை கொண்ட பரம் பொருளைக் குறிக்கும். புருஷ ஸீக்தம்’ஸஹஸ்ர சீருஷா புருஷ:’ என்று தொடங்குவது குறிப்பிடத்தக்கது. ‘த்ரயீவித்யா’ என்ற சொல்லால் குறிக்கப்பட்ட ரிக்,யஜீஸ், ஸாம என்ற மூன்று வேதங்களும் ஆதித்யனுடைய மூன்று மண்டலங்களாகப் பிரகாசிக்கின்றன. பிரஸித்தமான ரிக்-வேத மந்திரங்கள் ஒளி மண்டலமாக ஒளி-வடிவமாகத் திகழ்கின்றன. வெப்பத்துடன் கொழுந்துவிட்டெரியும் ஜ்வாலைகள் ஸாம வேதமாக, ஸாம கீதங்களாகத் திகழ்கின்றன. ஜ்வாலையில் ஒளிரும் பரம்புருஷன் யஜீர்வேத மந்திரங்களாகத் திகழ்கிறான். ஆகவே, ஆதித்யனுள் பொன்வடிவமான பரமாத்மா உறைகிறார்.

நித்ய கர்ம அனுஷ்டானத்திலுள்ள காயத்ரி மஹாமந்திரம் ஓம், பூ:,புவ:,ஸீவக், தத் ஸவிது: வரேண்யம்! பர்க:தேவஸ்ய திமஹி, திய:ய: ந: ப்ரசோயாத்! என்று அமைந்துள்ளது. எந்த ஒளி நமது புத்தியைத் தூண்டிவிடுகிறதோ, அந்த மேலான ஒளியை வணங்குவோம் என்றவாறு அமைந்துள்ளது. ஸவிது: என்ற சொல் ஒளி என்ற அர்த்தத்தில் ப்ரமாத்மாவையும், ஸீரியனையும் குறிக்கிறது.

கருத்து: ப்ரஹ்மத்தின் மூச்சுக்காற்றான வேதத்தின் வடிவமாக விளங்கும் அன்னை பராசக்தி காயத்ரிதேவியாக வணங்குவோரை ஆட்கொள்கிறாள். ஸீர்யபகவானும் மூன்று வேதங்களையும் தன்னகத்தே கொண்டு ப்ரஹ்மத்தின் ரூபமாக விளங்குகிறார். ஆகவேதான் ஸீர்ய பகவானை வேத புருஷனான பரமாத்மாவாகத்யானம் செய்யும் நோக்கத்துடன் காயத்ரி மந்திரம் ஸீர்யனைக் குறித்து அமைந்துள்ளது. இதை நம் ஸமூகத்திலுள்ள இளைஞர்கள் நன்குணர்ந்து நம்பிக்கையுடனும் ஸ்ரத்தையுடனும், காயத்ரி ஜபம் மூலமும் ஸீர்ய பகவான் மூலமும் பரமாத்வை த்யானித்துப் பயன் அடைவார்களாக!


பாரதி பக்கம் சத்திய விஜயம் அல்லது மெய்ப் பொருள் விளக்கம்



Designed and maintained by AKR Consultants