Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை






The Magazine for Brahmins




சத்திய விஜயம் அல்லது மெய்ப் பொருள் விளக்கம்

ஸ்ரீ ஓம்கார கிரி சுவாமிகள்

பூர்வாசிரம பெயர்: வத்தலக்குண்டு K. கோபாலகிருஷ்ண அய்யர்

தொடர் - 32

அசம்சக்தி

அல்லது

சுந்தர காண்டம்

'சிவனாய்த் தன்னை அறியாதான், திருட்டும் கொலையும் புரிந்தோனாம்’ என்று சூத சம்ஹிதையில் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் என்றும், சிவனென்றும், ஆத்மாவென்றும், ஜீவர்களுடைய சைதன்யம் அல்லது ஞெப்தி என்ற அறிவுதான் சொல்லப்­படுகிறது.

அறிவின்றி மனோவிலாசமில்லை; இந்திரிய சேஷ்டைகளுமில்லை. பஞ்சேந்திரியங்களின் சேஷ்டையில்லாவிட்டால் பஞ்ச பூதங்­களினிருப்பில்லை. பூதங்களின்றி உலகில்லை. உலகமின்றி நமது உடலுமில்லை. சகலத்துக்கும் ஆதிகாரணம் அறிவேயென சித்திக்கிறது, அதனாலேயே பிரக்ஞானம் அல்லது அறிவே பிர்மம். பிர்மமே சத்தியம். ஜகத்துமித்தை என்று உபநிஷத்து கூறுகிறது.

உபநிஷத் என்றால் சமீபத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்றுபொருள். ஜீவாத்மா தன்னை பரமாத்மாவாய்த் தெரிந்துகொள்ளும்படி போதிப்பதே உபநிஷத்தின் காரியமாகும். உபநிஷத் பொருளை அறிந்துணர்ந்து, சுவானுபவம் பெற்ற பேரறிஞனே குருவாவார். தேக வியாதிக்கு அனுபவ வைத்தியனிடம் மருந்து சாப்பிடுவதுபோல், மனோவியாதியான அஞ்ஞான நிவிர்த்திக்கு நல்லாசானை அணுக வேண்டும்; அவருடைய உபதேசம் பெற்று அவருடைய சொற்படி நடக்கவேண்டும்.

மாடியிலிருந்து கீழே விழுந்து காயப்பட்டுப் பிரக்ஞை தவறினவனுக்கு (First Aid) முதல் உதவியான சில்லரைச் சிகிச்சைகள் செய்வது போல, இந்து தர்மத்துக்கு அனுசரணையான சில ஆத்மீக விஷயங்களை, தம்மை இந்துக்கள் தாமென்பதை மறந்தவர்களுக்கு நினைப்பூட்டுவதே இந்நூலின் நோக்கம்.

'ஹிந்து' என்றால் இந்தியா தேசத்தில் பிறந்த பிற மதஸ்தர்களுள் ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்று சாதாரணமாய்க் கருதப்படுகிறது. தர்மம் என்பது ஒரு மதக் கொள்கையென்று சொல்லுகிறார்கள். மதம் என்றால் என்ன? ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு குரு ஏற்பட்டிருக்கிறார் என்பது யாரும் அறிந்த விஷயம். 'குரு' என்ற பதத்திற்கு அஞ்ஞானத்தை நீக்குபவன் என்று பொருள். ஆகையால் மதம் ஞானத்தை போதிக்கும் சாதனமேயாம்.

மிருகங்கள் போல் உண்பது, உறங்குவது முதலிய காரியங்களிலேயே காலங்கழித்து, நாம் யார், இந்த உலகம் ஏன் தோன்றுகிறது எப்பொழுது உண்டாயிற்று முதலிய விஷயங்களை விசாரித்து அறியாமலிருப்பதே அஞ்ஞானமாகும். அஞ்ஞானம் நீங்கி உண்மை அறிவு ஏற்படுதலே ஞானமாகும். ஆகையால் தர்மம் என்பது ஞான சாதனமென்றே அறிதல் வேண்டும்.

பிறந்த மனிதன் இறக்கிறான் என்பது யாவரும் அறிந்த உண்மை. தேகம் உயிரற்று விழுவதையே இறத்தல் என்று சொல்லுகிறோம். மனிதன் தான் இறக்கு முன் ஞானத்தை அடைய வேண்டும். மனதை உடையவனே மனிதனாவான்.

ஞானத்தை அடையாதவரையில் மனது நசிப்பதேயில்லை. மனது நசியாதவரை பிறப்புண்டு. பிறப்பற்றிருப்பதே ஞானத்தின் காரியமாகும். பல்வகைப் பிறப்புகளுள் மனிதப் பிறப்பே விசேஷமானது என்பது சொல்லாமலே விளங்கும்.


காயத்ரி மந்த்ரம் ஆர்யத்தமிழன் பக்கம்



Designed and maintained by AKR Consultants