Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை






The Magazine for Brahmins




நிகழ்வுகள்

பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 80வது ஜன்மோத்ஸவ வைபவம்

11.08.2014, காஞ்சி மடம்.

“எந்த துறவியும் இந்து மதத்தின் எல்லா பிரிவினர்களையும் இந்த அளவிற்குச் சென்றடைந்ததில்லை. எந்த அமைப்பும் இத்தனை சமுதாயப் பணிகளைச் செய்ததில்லை” என உலகம் வியந்து போற்றும் பூஜ்ஜியஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 80வது ஜன்மோத்ஸவ வைபவம் கடந்த 11.08.2014 அன்று வெகு சிறப்பாக காஞ்சியில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆண்டு முழுவதும் பல ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்படவுள்ள இந்த அபூர்வ நிகழ்வின் ஆரம்ப தினமான அன்று ஆன்றோர்களும் சான்றோர்களும் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான காஞ்சி மடத்தின் பக்தர்களும் முந்தைய நாள் (10.08.2014) முதலே அலை என வந்து சுவாமிகளை வணங்கி ஆசி பெற்று சென்றார்கள்.

முகப்பில் நாம் முன்னுரையில் கொடுத்த பொன்மொழிகளுடன் கூடிய, சுவாமிகளின் புகைப்படங்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் வாசகங்களுடன் அச்சிட்டு சுமார் 500 பிரதிகளை பிராமின் டுடே இதழ் சார்பாக சுவாமிகளின் திருவடியில் வைத்து, ஆசி பெற்று வந்தோம். வழக்கம் போல, புன்னகையுடன் நம்மை வரவேற்று பிராமின் டுடே இதழுக்கு ஆசி வழங்கிய அந்த உண்மை துறவி சுவாமிகளின் உபதேசம் வழி நடப்போம்.

தென்னிந்திய புரோகிதர் மாநாடு

காஞ்சி மடம், காஞ்சிபுரம்

கடந்த சில ஆண்டுகளாக தவறாமல் கலந்துக்கொண்டு புரோகிதர்கள் அடைந்து வரும் இன்னல்கள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து தென்னிந்திய புரோகிதர் மாநாட்டில் உரையாற்றும் பணியை கடமையாக கொண்டுள்ள நாம் இந்த வருடம் கடந்த 16.08.2014 அன்று காஞ்சியில் நடந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு, நீண்ட சிறப்புரையை ஆற்றினோம்.

புரோகிதர்களை புறக்கணிப்பு செய்ததினால் மராட்டிய பிராமணர்கள் தற்பொழுது படும் இன்னல்களையும் புரோகிதர்கள் சரியான முறையில் வைதீக காரியங்களில் ஈடுபடாத நிலையினால பூனா, நாசிக் போன்ற மராட்டிய நகரங்களில் பிராமண பெண்களே புரோகிதர்களாக உருவெடுத்திருப்பதை சுட்டிக்காட்டிய பிராமின் டுடே ஆசிரியர் தமிழ்நாட்டில் அந்த நிலை வராமல் தடுப்பதற்கு கிரஹஸ்தர்களும் புரோகிதர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.

அடுத்து பேசிய ரோகிணி சாஸ்திரி அவர்கள் ஏதோ சில புரோகித சகோதரர்கள் செய்யும் சிறிய தவறுகளைப் பெரிதுபடுத்தக்கூடாது என்றும், புரோகிதர் சங்கம் அவர்களின் சிறப்பான பணிகள் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை முன்நின்று செயல்படுத்தும் என உறுதியளித்தார்.

அண்மையில், தமக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாது, மிக சிறப்பான முறையில் மாநாட்டை நடத்திய, புரோகிதர் சங்க நிறுவனர் மற்றும் தலைவராக விளங்கும் திரு. ஆற்காட்டு. நரசிம்மன், பிராமின் டுடே இதழில் புரோகிதர் சங்கம் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்கும் ஒவ்வொரு வருடமும் வந்து மாநாட்டில் கலந்துகொள்வதற்கும் சங்கத்தின் சார்பிலும் தனது சார்பிலும் பிராமின் டுடே ஆசிரியரை வாழ்த்துவதாக கூறி பொன்னாடை போர்த்தி விருது வழங்கி நம் இதழுக்கு கவுரவம் அளித்தார்.

விழா போஷகர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வழங்கிய அருள் ஆசியும், பின்னர், பூஜைக்கு பின் வந்து ஸ்ரீ பாலபெரியவாள் வழங்கிய அருள் ஆசியும் வந்திருந்த அனைவருக்கும் புத்துணர்வையும் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது.


தமிழ்த்தாயின் சகோதரி ஸமஸ்கிருதம் - 3 தேதியூர் பக்கம்



Designed and maintained by AKR Consultants