Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை






The Magazine for Brahmins




தேதியூர் பக்கம்

ஷோடச நாமாக்கள்

தேதியூர் V.J. ராமன்

விஜய கணபதி கோவிலில் நவகிரக சன்னதியை 9 முறை சுற்றி விட்டு வெளியே வந்தார் கிருஷ்ணசாமி.

யாரோ தொடர்ந்து தேங்காய் உடைப்பதைப் பார்த்த கிருஷ்ணசாமி கிட்டே சென்று யார் என்று பார்த்தார்.

அடேடே நம்ம வெங்குட்டு ‘என்ன வெங்குட்டு தேங்காய் உடைச்சுண்டு இருக்கே என்ன விசேஷம்’

நம்ம ஜோஸ்யர் சொன்னா மாதிரி பையனுக்கு பரிகாரங்கள் எல்லாம் பண்ணினேன். கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து.

‘அதுக்குத்தான் தேங்காய் உடைக்கறியா அல்லது யாராவது இதை பரிகாரமா செய்யச் சொன்னாளா’ கேட்டார் கிருஷ்ணசாமி.

‘போன மாசம் காசிக்கு போயிருந்தேன். காஞ்சிகாமகோடி மடத்திலே அம்பாள் சன்னதியிலே உட்கார்ந்து மனசார அழுதேன். அவளிடம் ஓடிப்போன என் பெண்ணுக்கும் நல்ல வழிகாட்டு என்று வேண்டிக்கொண்டிருந்தபோது ஒரு சன்யாசி வந்தார்’

‘அப்புறம்’

‘என்னைப் பார்த்து என்ன காரணத்துக்காக கண்கலங்கறேன்னு கேட்டார். பையன் கல்யாணம் ஆகாமல் இருப்பது. பெண் ஓடிப்போனாலும் போன இடத்திலே நிம்மதி இல்லாம சித்திரவதைக்கு ஆளாகிண்டு இருக்கா அவளுக்கு அந்த நரகத்திலேருந்து விடுதலை கிடைச்சு நிம்மதியான புது வாழ்க்கை கிடைக்கனும்னு சொன்னேன். ஜோஸ்யர் சொன்னபடி செய் நல்லது நடக்கும். பெண்ணுக்கும் புது வாழ்க்கை அமையும். பிள்ளையாருக்கு 16 தேங்காய் உடை என்று சொல்லிவிட்டு விடு விடுன்னு போயிட்டார். பிள்ளைக்கு ஜோஸ்யர் சொன்னபடி பரிகாரங்களைச் செஞ்சேன். கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்து. பெண்ணுக்கு எப்போ விமோசனம் கிடைக்கும்னு தெரியலே.

‘பல ஸ்தலங்களுக்கு போயிட்டு கடைசியிலே பிள்ளையார் கிட்டே வந்திருக்கே. அந்த சன்யாஸி ஏதோ ஒரு விஷயம் இல்லாம இதை சொல்லி இருக்கமாட்டார். ஜோஸ்யர் சொன்னாமாதிரி உன் பையனுக்கு விவாஹம் கைக்கூடிவிட்டது. அந்த சன்யாஸி சொன்ன இந்த பிள்ளையார் சமாசாரத்திலேயும் ஏதோ காரணம் இல்லாமல் இருக்காது. நி ஒன்னு பண்ணு வெங்குட்டு. இன்னிக்கு சாயந்திரம் என் கூட ஜோஸ்யர் ஆத்துக்கு வா. அவர் இந்த விஷயத்துக்கு நிச்சயம் நல்ல விளக்கம் சொல்லுவார். எனக்கும் நல்லது நடக்கத்தான் இத்தனை விஷயங்களும் நடக்கின்றன என்று தோணறது’ சொல்லிவிட்டு கிளம்பினார் கிருஷ்ணசாமி.

கிருஷ்ணசாமி, ராமசாமி வெங்குட்டு மூவரும் ஜோஸ்யர பார்க்க கிளம்பினார்கள்.

‘என்ன கிருஷ்ணசாமி இரண்டு மாசம் கழிச்சு வெங்குட்டுவை மறுபுடியும் அழைச்சுண்டு வந்திருக்கே’

‘மாமா நீங்க சொன்னபடி பரிகாரங்கள் எல்லாம் பண்ணி, வெங்குட்டு காசிக்கெல்லாம் போயிட்டு வந்திருக்கான். அங்கே நம்ம காஞ்சி மடத்திலே ஒரு சன்யாஸியை பார்த்து இருக்கான். அவர் எல்லாம் நல்லதே நடக்கும் பிள்ளையாருக்கு 16 தேங்காய் உடைன்னு சொல்லி இருக்கார். இதிலே ஏதோ ஒன்னு புரிஞ்சுகொள்ள முடியாத சூக்ஷமம் இருக்கும்னு தோணறது. உங்ககிட்டே கேட்டா பையனுக்கு நல்லது நடந்தா மாதிரி இவன் பெண்ணுக்கும் ஏதாவது நல்லது நடக்காதான்னு தோணறது’ சொன்னார் கிருஷ்ணசமி.

‘பரமாச்சார்யாள் பரமேஸ்வரனின் அவதாரம் அவர் சன்னதியிலே காஞ்சி சேக்ஷத்ரத்திலே அவரே கூட வந்து உனக்கு அனுக்கிரகம் பண்ணி இருப்போரோன்னு தோணறது. பிள்ளையாரைப் பற்றி அவர் சொன்ன விளக்கம் மாதிரி யாராலும் சொல்ல இயலாது. அவர் சொன்ன விளக்கம் உனக்குத்தானோ என்றும் எனக்கு எனக்கு எண்ணத் தோணறது’

‘அப்படி என்ன மாமா பரமாச்சார்யாள் சொன்னார்’ கேட்டார் ராமசாமி.

‘வெங்குட்டுவின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், போராட்டங்களுக்கு பரிகாரங்களை ரொம்ப எளிமையா நம்ம பரமாச்சர்யாள் சொன்னதைத்தான் அந்த சன்யாஸி என் மூலமா சொல்ல வைக்கிராரோன்னு தோணறது. பெரியவா சொன்ன விஷயங்களைச் சொல்றேன் கேளுங்கோ’

வாழ்க்கைங்கறதே பல தினுசான சலனங்கள்தான். இப்போது இருக்கறது நாளைக்கு இல்லை என்று மனசாலேயும் புத்தியாலேயும் பணத்தாலேயும் பல தினுசான காரியங்களைப் பண்ணி மாறிக்கொண்டே இருப்பதுதான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி பிரயாணம் பண்ணிக்கொண்டே இருக்கிறோமே அதுதான் முக்கியமான மூவ்மெண்டாகத் தெரிகின்றது. இதைத்தான் “ப்ரவேஸம்’ என்பது ஒரு இடத்துக்கு உள்ளே போவது. ‘நிர்கமம்’ என்பது ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு வெளியே போவது.

‘என்ன மாமா ஒரே குழப்பமா இருக்கே. ஏதோ தத்துவம் சொல்றா மாதிரி சொல்றேளே’ சொன்னார் கிருஷ்ணசாமி.

‘நான் சொல்லலே பரமாச்சார்யாள் சொன்ன விளக்கத்தை கொஞ்சம் உன்னிப்பா கேட்டேள்னா வெங்குட்டு இது வரைக்கும் எங்கேயெல்லாம் பிரவேசம் பண்ணி உள்ளார். எப்படி வெளியே வரப்போறார் என்பதைப் பார்க்கலாம்.

எந்த விதமான மூவ்மெண்டானாலும் ஏதோ ஒரு விஷயத்துக்குள் ப்ரவேசிக்கிறோம். ஏதோ ஒன்றை விட்டு புறப்படவும் செல்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் ஒருத்தருக்கு இடைஞ்சல் வராமல் பலன் கிடைக்கணும்னா என்ன செய்யனும் . வாழ்க்கையே சலனம் என்றால் அதற்கு இன்னுமொரு அர்த்தமும் சொல்லலாம். அதுதான் வாழ்க்கை என்பதை போராட்டம் என்றும் சொல்லலாமே. டார்வின் தியரி, ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் தியரி எல்லாமே போராடித்தானே எல்லா ஜீவன்களும் வெற்றியை சந்திக்கின்றன என்றும் சொல்கின்றன.

யோஜனைப் பண்ணிப் பார்த்தால் சலனமும் போராட்டமும் ஒன்றுக்கொன்று கனெக்ஷன் உள்ளவை என்று தெரியும். யாரோ ஒருவனுக்கும் மட்டும் சலனம் மற்றது எல்லாமே சலனம் இல்லாமல் இருக்கின்றது என்று நினைக்க தோன்றலாம். வாஸ்தவத்தில் அப்படி இல்லை. இப்படி ஒரு ஜீவனோ, ஜடமோ சலனம் அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்தை நோக்கி செல்கிறது என்றால் அது போராடுகின்றது என்றே சொல்லவேண்டும். இந்த போராட்டத்தின் முடிவு சாந்தியை, வெற்றியை நோக்கித்தான் கடைசியில் முடியும்.

‘வெங்குட்டு பல இடங்களுக்கு சென்றது சலனம். இந்த சலனம் போராட்டமாக சென்று கொண்டு இருக்கின்றது என்றால் இந்த போராட்டம் எதில் முடியும் மாமா’ கேட்டார் கிருஷ்ணசாமி.

‘வெங்குட்டு போன்று மனம் நிம்மதி இழந்து போராட்டங்களைச் சந்திக்கும் அனைவருக்குமே வெற்றி கிடைக்கும் வழியைத்தான் பரமாச்சார்யாள் சொல்லி உள்ளார்.

‘வித்யாரம்பத்தில் ஆரம்பித்து, பிரம்மசர்யம் தொடங்கி பின்பு விவாஹத்தால் கிரகஸ்தாச்ரமத்தில் படும் பாடுகள் என்று சொல்வதற்கு பதிலாக ‘ஸர்வ கார்யே ஷ: விக்நஸ் தஸ்யநஜாயதே’ எல்லா காரியங்களிலும் விக்னம் விலக வேண்டும். ‘ஷோ ச ஏகாநி நாமாதிய: படேத் ஸ்ருணுயாத் அபி:’ அதாவது ஷோடச நாமாதி பதினாறு நாமாக்களை எவன் ஒருவன் கேட்கிறானோ அல்லது சொல்கிறானோ அவனுக்கு எந்த காரியத்திலும் விக்னம் என்பதே இல்லை. வெற்றியே கிடைக்கும்.

'அது என்ன 16 நாமாக்கள்? எந்த தெய்வத்தினுடைய நாமாக்களைச் சொன்னால் விக்னம் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும் மாமா’ கேட்டார் வெங்குட்டு.

‘அவர்தான் விக்னங்களைப் போக்கும் விக்னேஸ்வரர் ‘விக்னம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே’ சொல்றோம் இல்லையா சன்யாஸியா வந்த பரமாச்சார்யாளேதான் உனக்கு சங்கடங்கள் நீங்க வழிசொல்லி இருக்கார். 16 தேங்காயை உடைச்சியே தவிர அதைச் சரியா புரிஞ்சிண்டு செய்யலேயே நீ’

‘என்ன மாமா சொல்றேள் புரியலையே கேட்டார் வெங்குட்டு.

ஷோடச நாமாக்களைச் சொல்லிண்டுன்னா நீ தேங்காய்களை உடைக்கனும். அவருடைய ஷோடச நாமாக்களைச் சொல்லாமல் வெறுமனே தேங்காய்களை உடைச்சா எப்படி உனக்கு பலன் கிடைக்கும்.

‘என்ன அந்த ஷோடச நாமாக்கள்’ கேட்டார் ராமசாமி.

1) ஓம் ஸீமுகாய நம:

2) ஓம் ஏக தந்தாய நம:

3) ஓம் கபிலாய நம:

4) ஓம் கஜகர்ணகாய நம

5) ஓம் லம்போதராய நம:

6) ஓம் விகடாய நம:

7) ஓம் விக்னராஜாய நம:

8) ஓம் வினாயகாய நம:

9) ஓம் துமகேதவே நம:

10) ஓம் கணாத்யக்ஷாய நம:

11) ஓம் பால சந்த்ராய நம:

12) ஓம் கஜான்னாய நம:

13) ஓம் வக்ரதுண்டாய நம:

14) ஓம் சூர்ப்பகர்ணாய நம:

15) ஓம் ஹேரம்பாய நம:

16) ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

இந்த 16 நாமாக்களுடன் முத்தாய்ப்பாக ஸ்ரீமஹாகணபதேயே நம: என்றும் சொல்லி தேங்காய்களை உடைக்க வேண்டும். இப்படிச் செஞ்சால் உன் பெண்ணுக்கும் விடி மோக்ஷம் கிடைக்கும். புது வாழ்வு நிச்சயம் அமையும். இதைத்தான் சன்யாஸி ரூபத்தில் வந்த பரமாச்சார்யாள் உனக்கு சொல்லிட்டு போயிருக்கார் புரிஞ்சுதா. உன் பெண் ஜாதகத்திலே 7 லே சூரியன் 8 ம் இடத்தில் சனி செவ்வாய் சேர்ந்து இருப்பதினாலேதான் ஓடிப்போய் வேற்று ஜாதி பையனை கல்யாணம் பண்ணிண்டு இப்போ திண்டாடிண்டு இருக்கா. இந்த மாதிரி ஜாதகர்களுக்கு புனர் விவாஹம் உண்டு என்கிறது ஜோதிடசாஸ்திரம். அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையாகவும் அமையும். மாங்கல்ய ஸ்தானத்தில் சனிஸ்வரன் வந்தவர்களுக்கு விக்னேஸ்வரனாலேயே புனர் வாழ்வு கிடைக்கும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. சனிஸ்வரனால் ஏற்படும் பாதகங்களுக்கு விக்னேஸ்வரனாலேயே வழிகாட்ட இயலும். இதைத்தான் பரமாச்சாரியாள் என் மூலமாக உனக்கு சொல்லச் சொல்லி இருக்காறோன்னும் தோணறது. உன் பெண்ணை தினமும்

‘ஓம் வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித
மம சங்கடம் நிவாராய ஸ்வாஹா:’

இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கச் சொல்லு. அவளுக்கு எல்லா சங்கடங்களும் நீங்கி புனர் வாழ்வு கிடைத்துவிடும். ஒரு முறை நாமக்கல் அருகில் உள்ள ஸேந்தமங்கலத்தில் உள்ள ‘தத்தாஸ்ரமத்தில்’ பிரசித்தபெற்ற சங்கடஹர கணபதியை, பெண்ணை அழைச்சுண்டு போய் 108 பிரதக்ஷணம் செஞ்சுட்டு வா. உன் குடும்பத்தில் உள்ள அனைத்து சங்கடங்களும் விலகிடும். என்ன புரிஞ்சுதா’.

‘புரிஞ்சது மாமா. வரும் சதுர்த்தி அன்னிக்கே நீங்க சொன்னாமாதிரி செய்யறேன்’

விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர் மூவரும்.


நிகழ்வுகள் நூல் மதிப்புரை



Designed and maintained by AKR Consultants