Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை






The Magazine for Brahmins




நூல் மதிப்புரை

ஸ்ரீ ஜயேந்திர விஜயம்

வெளியீடு:

ஸஹஸ்ரதின சதாபிஷேக வெளியீடு

தொகுத்து எழுதியவர்:

பு.மா. ஜயசெந்தில்நாதன்

நூல் கிடைக்குமிடம்:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்,

நெ.1, சாலைத்தெரு, காஞ்சிபுரம் - 631502

வானதி பதிப்பகத்தாரால் 1983ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற இந்நூல் தற்போது ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய் ஸ்வாமிகள் அவர்களின் ஸஹஸ்ரதின சதாபிஷேக மஹோத்ஸவ வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. '

மஹா சுவாமிகள்' என்று மாநிலம் புகழும் மஹா பெரியவாளாள் தமக்கு அடுத்து ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதியாக அருளப்பட்ட, ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேற்கொண்ட சில முக்கியமான யாத்திரையைச் சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் சுவையாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.

19 வயதே நிரம்பிய இளைஞனாக 1954ஆம் வருடம் பட்டம் ஏற்ற, இருள் நீக்கி சுப்ரமணியன் அருள் பொழியும் ஆன்மிகர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளாக உருவெடுத்த வரலாற்று சம்பவங்களை அருமையாக விளக்கும் இந்நூல், தங்கள் தங்கள் ஊர்களுக்கு சுவாமிகளை வரவேற்று, அருள்பெற்ற நிகழ்வுகளையும் விரிவாக விளக்குகிறது. வேறு எவரும் இதுவரை செய்யாத அளவிற்கு வைதீக, ஆன்மிக மற்றும் சமூகச் செயல் திட்டங்களையும் அதன் தொடர்புடைய அமைப்புகளையும் சுவாமிகள் நிறுவியது அழகாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இந்த நூலை படிக்கும் அனைவரும் ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகளின் ஈடு இணையற்ற இந்து மத ஆளுமையை எந்தவிதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்வார்கள்.

அந்த ஒரு அம்சத்திற்காவது எல்லோரும் இந்தப் புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று பிராமின் டுடே வலியுறுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது.

- ஒற்றை மாமரத்தான்

தமிழ் நாடு பிராமனர் சங்கம் (பதிவு)

மந்தைவெளி கிளை.

பள்ளி குழந்தைகளுக்கான பஜனைப் போட்டி. 3.8.2014.

பள்ளிகளுக்கு இடையேயான 23ம் ஆண்டு, பஜனை போட்டி ஆகஸ்ட் 3ம் தேதி மந்தவெளி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் மந்தவெளி தலைவர் ஸ்ரீ கே.ஆர். ஸ்ரீனிவாசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட 16 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இப்போட்டியை டாக்டர் ராதா மாதவன் தொடங்கி வைத்தார். ஹம்ஷத் ஸ்ரீ ராமச்சந்திரன், ஆடிட்டர் ஸ்ரீ நாராயண சுவாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஜி.ஆர்.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடம் பெற்றது. முதல் நான்கு இடங்களை பெற்ற பள்ளிகளுக்கு இசை கருவிகள், கேடயம், மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட எல்லா மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டன.


தமிழ்த்தாயின் சகோதரி ஸமஸ்கிருதம் - 3 எந்தையும் தாயும்



Designed and maintained by AKR Consultants