Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை






The Magazine for Brahmins




எந்தையும் தாயும்

கோவா பிராமணர்கள்

கத்தோலிக்க பிராமணர்கள்

சூழ்நிலையின் கைதியாகி, அங்கிருந்த திவார் ஊர் பிராமணர்கள் அத் தருணத்தில் இந்து மதத்தை விட்டு கிருஸ்துவர்களாக மாறினாலும், அதுவரை தாங்கள் பின்பற்றிவந்த ஆழ்ந்த பிராமணக் கலாச்சாரத்திலிருந்து வீழ்ந்துவிடாமல்தான் இனி எப்போதும் வாழ்ந்து வருவோம் என்ற உறுதிமொழியை மேற்கொண்டார்கள். நிபந்தனையாக முன்வைக்கப்பட்ட அந்த நியமக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக, அப்போதய போப்பாண்டவர் எழுத்து மூலம் அளித்த சாசனப் பத்திரம் இன்றும் ஒரு சரித்திர ஆவணமாக விளங்குகிறது.

உலகில் வேறெங்கும் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது எனக் கூறும்படி உடனே ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த மத மாற்ற நிபந்தனைகளின் சில அம்சங்கள்.

1. கிருஸ்த்துவர்களாக மதம் மாறிய கோவா பிராமணர்கள் தொடர்ந்து பூணூல் அணிந்துகொள்ளவும் அதன் தொடர்புடைய சடங்குகள் செய்யவும் தடை இல்லை.

2. விவாஹங்களை பிராமண கலாச்சரப்படி செய்வதுடன் தாலி கட்டிக்கொள்ளவும் அனுமதி உண்டு.

3. உணவு மற்றும் மொழிப் பயன்பாடு விஷயங்களில் எந்தப் புதிய மாற்றங்களும் இருக்காது.

4. அச்சமயம், மதம் மாறியவர்கள் 90 சதவீதம் G.S.B. என்ற கௌட ஸரஸ்வத் பிராமணர்களாக இருந்தார்கள். அவர்களின் அடையாளப் பெயர்களாக இருந்த பிரபு, காமத் போன்ற பிராமண அடை மொழியுடன் மட்டுமே மத மாற்றத்தால் வந்த போர்த்துகீசிய புதுப் பெயர்கள் வைக்கப்பட்டன. அதுவும் பின்டோ, ஃபெர்கூசன், டிசௌசா போன்ற பெயர்கள் சூட்டப்படும் பொழுது கோவா பிராமண கிருஸ்துவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

5. கிருஸ்துவர்களாக மதம் மாறிய பிராமணர்கள், வழிபாடு செய்ய பிரத்யேக சர்ச்சுகள் நிறுவப்படும். மற்ற சர்ச்சுக்களில் பிறர் அனுமதிக்கப்படாத பிரத்யேக சமயங்களில், வழிபாடு நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும்.

இத்தனை கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு கோவா பிராமணர்களை கிருஸ்துவர்களாக மாற்றுவதில் ஜீஸஸ்ட்டுக்கள் ஆர்வம் காட்டியதற்கு அடிப்படயான சில காரணங்கள் இருந்தன.

இந்தியாவில், கிருஸ்த்துவ மதம், எதிர்வரும் எல்லா காலங்களிலும் நிலைத்து நிற்பதற்கும் அது மேலும் வளர்ச்சி அடைவதற்கும் பிராமணர்களின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை “ஒரு கோட்பாடாக” முன்வைக்கப்பட்டதை, உலகம் முழுவதும் கிருஸ்துவ மதத்தை பரப்புவதை அரசுக் கடமையாகக்கொண்டிருந்த போர்த்துகீசிய மன்னர்கள் முழுவதுமாக ஏற்றுக் கொண்டார்கள்.

படிப்பறிவு மற்றும் பண்பாட்டு பின்பற்றுதல் இல்லாத சாமண்யர்களை மிகுந்த எண்ணிக்கையில் கிருஸ்த்வர்களாக மதம் மாற்றம் செய்வது கிருஸ்த்துவ கொள்கை மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு பெரிதும் பயன் தராது என்பதே இன்றுவரை, பாரம்பரிய கத்தோலிக்க நடைமுறையாளர்களின் நம்பிக்கை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பின்னாளில் உருவான புராட்டஸ்டண்ட் மற்றும் ஈவாஞ்சலிஸ்ட் மதப்பிராசர்கள் மட்டுமே தங்களுக்கு தடை இன்றி கிடைக்கும் அமெரிக்க உதவியுடன் இப்பொழுதும் இந்தியா முழுவதும் சாமாண்யர்களை இலக்காக் கொண்டு கிருஸ்துவ மதப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

(தொடரும்)


நூல் மதிப்புரை அரைப்பக்க அவியல்



Designed and maintained by AKR Consultants