Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com





  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை






The Magazine for Brahmins




அரைப்பக்க அவியல்

அரசியல் தாண்டிய ஆற்றாமை

அரசியல் விஷயங்களுக்கு நம் அருமை இதழில் அறவே இடம் இல்லை என்று ஆன பிறகு அதுப் பற்றிய சில அம்சங்களை அவ்வப்போது உரசிப்பார்ப்பது ஏன்? என்ற உறுத்துதல் வாசகர்களைப் போலவே நமக்கும் ஏற்படுவதுண்டு. ஆனால், கண் முன் நடக்கும் சில நண்பகல் காட்சிகளைக் காண நேரிடும்பொழுது, அக்காட்சிகள் தொடர்புடைய உண்மைகளை நம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவே விரும்புகிறோம்.

தமிழக பா.ஜ.க.-வின் தலைவர், இல்லை இல்லை தலைவி, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைப் பற்றி நாம் செய்ய விரும்பும் விமர்சனம் எந்த சிறிய அளவிலும் அவரின் திறமை மற்றும் அரசியல் பின்னணியை அடிப்படையாக கொண்டது அல்ல. மருத்துவ சேவை புரியும் அந்த மாதர்க்கு எதிரான எந்த எதிர்க்கருத்தும் நமக்கு கிஞ்சித்தும் இல்லை. மேலும் அண்ணாரின் தலைமையில் பா.ஜ.க, தமிழகத்தில் இன்னும் அதிக வளர்ச்சி அடைய நம் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நடந்து முடிந்த, மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று, மத்திய அமைச்சரவையிலும் ஒரு இடத்தையும் பெற்றிருக்கும் இத்தருணத்தில், தலைவராக நியமிக்கப்படுவதற்கு எல்லா தகுதிகளையும் பெற்றுள்ள ஒரு தமிழகப் பிராமணர் கைவசம் இருந்தும், பா.ஜ.க. கட்சியின் தமிழகத் தலைவராக ஒரு பிராமணர் நியமிக்கப்படவில்லை.

கட்சி வளர்ந்துவரும் நேரத்தில், ‘ஒரு உச்சிக்குடுமிக்காரனை’ தலைவனாக்கினால் அச்சு உடைந்த தேராக, நம் கட்சியின் கதி அதோ கதியாகிவிடும் என்று அந்த உச்சக்கட்ட ஆலோசனையில் சொல்லப்பட்டதாக நமக்கு காற்றில் வந்த செய்தி அல்லது ஊகமே நம் கட்டுரையின் ஆதாரமாகும்.

தமிழக அரசியலை பொருத்தவரை இனி எந்த ஒரு காலத்திலும் தலைமை பதவியில் அமர்ந்து வழி நடத்தி செல்லும் வாய்ப்பு பிராமணர்களுக்குக் கிடைக்க போவது இல்லை. பிராமணராய் பிறந்து, பிராமணராய் வாழ விரும்பாத, ஒரு சிலருக்கு கிடைத்திருக்கும் அந்த வாய்ப்பும் கடந்த கால வரலாற்று தடையத்தின் தொடர்ச்சியாகவே இருக்க முடியுமே தவிர, வருங்காலத்தின் அம்சமாக இனி இருக்க முடியாது. இந்துத்வா கட்சியாக இருந்தாலும் இடதுசாரி நக்சலைட் இயக்கமாக இருந்தாலும் எந்த ஒரு கட்சியிலும் தமிழகத்தைப் பொறுத்தவரை பிராமணர்கள் இனி தலைவராக முடியாது.

ஏணியாக இருந்து மற்றவர்களை ஏற்றி விடலாமேயன்றி, தோனியாக இருந்து ஆழ்கடலில் அடுத்தவர்களை பயணிக்க செய்யலாமேயன்றி, பிராமணர்களின் உழைப்பிற்கும் தியாகத்திற்கும், தமிழக அரசியலில் இனி அவர்களுக்கு கிடைக்கப்­போவது அந்த ‘கூனிக்கு’ கிடைத்த பட்டம் மட்டுமே. பாரதிய ஜனதா கட்சி என்றால், ‘என்ன’ என்று எதுவும் தெரியாத கடந்த காலங்களில், அந்த கட்சி கொள்கைகளை விவாதித்து, அடுத்தவர்க்கு எடுத்துச் சொல்லி, நம் பிராமண இளைஞர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், தியாகங்கள் மற்றும் கேட்க நேர்ந்த கேலி பேச்சுகள், கிண்டல் வார்த்தைகள் எல்லாம் இன்று கடலில் கரைத்த பெருங்காயமாக மறைந்துவிட்டது.

‘பா.ஜ.க என்றால் பாப்பான் கட்சி என்று பரிகாசம் செய்ததையும் பொருட்படுத்தாது, ஆடி ஓடி, அலைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், RSS இயக்கத்தை அறிமுகப்படுத்திய பல பிராமணர்கள், இன்றைய தமிழக பா.ஜ.க.-விற்கு தேவையில்லாமல் இருக்கலாம். அவர்கள் ஒட்டுமொத்தமாக போடும் வாக்குகள்கூட ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம்.

அதிகமாக அரசியல் விஷயங்களுக்குள் நாம் அமிழ்ந்துவிட விரும்பவில்லை என்பதால், மெதுவாக ஒரு சொந்த அனுபவத்தை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு இக்கட்டுரையை முடித்துக்கொள்ள விரும்புகிறோம். கல்லூரியில் படித்துக்கொண்டு நாம் இருந்த புதுக்கோட்டை நகர நாட்களில், அங்குள்ள திருகோக்கரணம் பகுதியில், ‘RSS’ கிளையை தோற்றுவித்து அவ்வியக்கத்தின் பௌதீக் (சொற்பொழிவாளர்) ஆகவும் இருந்த நாம், இந்துக்களின் எழுச்சி இயக்கம் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த அந்த குழுக்களிலும் ஆங்காங்கிருந்த பார்ப்பண எதிர்ப்பு உணர்வுக்கு, ‘அன்றே’ பரிச்சயப்பட்டிருந்தோம். இப்போது இது போதுமே ஏகாம்பரநாதா.ற்ற பள்ளிகளுக்கு இசை கருவிகள், கேடயம், மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட எல்லா மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டன.


எந்தையும் தாயும் Reflection



Designed and maintained by AKR Consultants