Editor: Vasan
Ph:26432027, 26411815
brahmintoday@gmail.com

Web Master:
A.K. Rajagopalan
Ph:9789581797
akrconsultants@gmail.com

  HOME ISSUES GALLERY MATRIMONIALS APPEAL NOTICE BOARD FEEDBACK SUBSCRIBE
Contents     BT127 Brahmin Today - September 2014 பிராமின் டுடே - செப்டம்பர் 2014     அட்டவணை


The Magazine for Brahmins
Reflection

நமஸ்காரம். “பிராமின் டுடே’ ஜூலை 2014 இதழ் அருமை. ஒவ்வொரு கட்டுரையும் ‘superb’ இதழ் அருமை. “Reflections” பகுதியும் நன்றாக இருந்தது.

கண் நரம்பியல் மருத்துவர் டாக்டர். அம்பிகாவை பற்றி கூறியிருந்தீர்கள். நன்று. நான் தற்பொழுதான் (Catract) கண்புரை operation இரண்டு கண்ணிலும் சிறந்த தனியார் கண் மருத்துவமணையின் செய்துகொண்டேன்.

தாராபுரம் உள்ளூர் கண் மருத்துவரிடம் கேட்டேன். Left eyeல் Black dot கண் முன் தோன்றுகிறது. Right eyeல் இல்லை என்றேன். அதற்கு அவர் Right eye புண்ணியம் செய்திருக்கு அதனால சரியாக உள்ளது என்றார். ஆப்ரேஷன் செய்த முக்கால்வாசி பேருக்கு இந்த Problem உள்ளது என்றார்.

“சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்” அய்யர் கேட்ட கேள்விக்கான பதிலை என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் கூறுகிறேன்.

1. தன் வாழ்நாள் முழுவதும் ஆச்சாரத்தை கடைப்பிடித்த சுந்தரம் வாத்தியார் அதன் மகிமையை கோட்பாடுகளை தன் மகளுக்கு கூற தவறியிருப்பார் என் எண்ணுகிறேன். அது மட்டுமல்லாமல் ஆச்சாரம் பிடிக்காமல் அதை உடைத்தெறிய வேண்டும் என்ற எதிர்மறை எண்ணங்கள் அவர் மகளுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

2. நன்கு படித்த நம் பெண்கள் சிந்தித்து செயலாற்றுவதோடு நல்லவனை மணக்கிறார்கள். இரண்டு கெட்டான்களே தப்பானவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ரொம்ப ஆச்சாரம் மற்றும் ரொம்ப அனாச்சாரமும் ஆபத்து. காலவர்த்தமம் தகுந்தபடி இருப்பது சிறந்தது. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது உண்மைதான்.

தங்கள் 125வது இதழ் மெருகோடு உள்ளது. அது அந்த காலத்தில் அமரர் எம்.ஜி.ஆர், சிவாஜியின் 100வது, 125வது படம் Release ஆகும் பொழுது எந்த பாதிப்பு ஏற்படுமோ அப்படி ஏற்படுத்தியுள்ளது. அருமை.

குருராகவேந்திரன். தாராபுரம்.

126வது இதழ் பற்றி. சென்னை tஷீ மும்பை 42 வாசகர்கள் விழாவிற்கு வந்தமைக்கு அவர்களுக்கும் ஏற்பாடு செய்த வாசனுக்கும் பாராட்டுக்கள். ‘ஆவணி அவிட்டச் சிந்தனைகள்’ ஆசிரியரின் பார்வையில் மாற்றமேதும் காணவில்லை. ஏதோ நல்லது செய்வதாக எண்ணி dump promise செய்தல் வேண்டாம். உத்யோகத்திற்காக நாள் கிழமை பாராமல் நாளும் சுயசவரம் செய்யும் நம் யுவர்களுக்கு 20 (அ) 30 நிமிஷங்கள் காயத்ரியை ஜபிக்க நேரமில்லையென்பது ஒரு மீஜ்நீusமீ தான். நீர் விரிக்கவுள்ள ஆசாரப் பாய் தர்ப்பாசனமாக இருக்கட்டும். பேராசிரியர் ஸ்ரீ களக்காடு சங்கரநாராயணய்யர் அவர்களது வ்யாஸம் நம் இளைஞர்களையும் ஏன் நம் அனைவரையும் கூட உற்சாகப்படுத்தும் ஒன்று. அவர் ஸேவை தொடரட்டும். “விரிஞ்சி நாராயண சங்கராத்மனே” என மும்மூர்த்திகளின் ஸ்வரூபமே ஸூர்யபகவான். உப்பிலியப்ப நரசிம்மரின் கண்டுபிடிப்பு ஒப்பில்லாதவுன்று. இது போல் தைரியசாலி அந்தணர்தான் எருக்கூர் ஸ்ரீ நீலகண்ட ப்ரம்மசாரி. பாரதி காலத்தவர். தேசத்தின் பொருட்டு புரட்சிவாதியாகி பின்னர் யோக மார்க்கம் தேர்ந்து, மைசூர் பக்கம் நந்தி ஹில்ஸ் என்ற இடத்தில் சிறுகுடில் அமைத்து ஸ்வாமி ஓம்கார் என்ற பெயரில் திகழ்ந்தார். மராட்டியத்தில் திலகர் ஸாவர்கர் போல தமிழகத்திலும் பலர் இன்றும்கூட பல வீரத்துறவிகள் (இராம.கோபாலன்) உள்ளனர்.

நீலகண்ட தீட்சிதர், சென்னை.

ஆகஸ்டு மாத பிராமின் டுடே இதழில் ‘யார் காரணம்’? என்ற தலைப்பில் தேதியூர் வி.ஜே. ராமன் அவர்களின் கட்டுரை படித்தேன். பித்ரு லோகத்தில் உடுப்பி ஹோட்டல்களோ கோவை அன்னபூர்ணா ரக உணவகங்களோ சரவணபவன் ஹோட்டல்களோ இல்லையென்பதால்தான் அவர்களுக்கு இங்கேயிருந்து அமாவாசை நாட்களிலும் வருடாந்திர திதிகளிலும் திவசம், தர்ப்பணம் எல்லாம் செய்யவேண்டும் என்று எல்லா பிரபல ஜோதிடர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே மாதிரியாகச் சொல்லிவருகிறார்கள். உங்கள் வீட்டில் நடக்கும் எல்லா கோளாறுகளுக்கும் பித்ரு காரியங்களைச் செய்யாததுதான் காரணம், உடனே ராமேஸ்வரம் போய் இதுவரை விட்டுப்போன வருஷாந்திர சிராத்தங்களுக்கான Arrears சடங்குகளைச் செய்துவிட்டு வாருங்கள் என்கின்றனர். பித்ரு காரியங்களைச் சரிவரச் செய்யவேண்டும் என்பது சரிதான். ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்களின் சாபம் ஏற்படும் என்ற வாதம் இம்மாதிரி ராமேஸ்வரம் etc., சென்று Arrears சடங்குகளைச் செய்தால்தான் குடும்பக் கோளாறுகள் நீங்கும் என்று பயமுறுத்துவதாகப் பகுத்தறிவுச் சிங்கங்கள் கர்ஜனை செய்கின்றன.

திருமதி. எஸ். பாலாம்பாள், சென்னை - 93.

" படிப்பது ராமாயணம்

இடிப்பதோ பெருமாள் கோவில்".

இந்த வாக்கியம் "நாமம் கேலிக்குறியதே" என்ற அஞ்சா நெஞ்சருக்கு மட்டும் அல்ல நம்மடைய இதழுக்கும் பொருந்தும். முதலில் இந்த கட்டுரைக்கு எனது மிக கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். “பிராமண ஒற்றுமை பிராமணச் சமூக மேன்மை” என்ற லட்சிய பயணத்தை மேற்கொள்ளும் நமது பத்திரிகைக்கு இந்த கட்டுரை ஒரு தடை கல்லே. ஆசிரியர் இதை தவிர்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அதற்கு ஒரு விளக்கத்தை கொடுத்து இந்த கட்டுரையை நியாயப்படுத்த முயல்வது வேதனையே. ஐயங்கார்களும், மத்வர்களும் ஆவணி அவிட்டம், விவசாயம், வேதம் ஓதுவது ஆகியவற்றை செய்கிறார்கள். ஆனால் இப்பத்திரிகை கார்ட்டூன்களில்கூட அம் மதச் சின்னங்கள் இடம் பெறாமல் இருப்பது ஆச்சர்யமே.

வ. வேங்கடேசன் குரோம்பேட்டை

பெரும்பாலும் நம் இதழ் கார்ட்டூன், அட்டைப் படங்களில் பிராமணர்களின் அடையாளச் சின்னமாக முன்பு ஒரு காலத்தில் எல்லாப் பிராணமனர்களுக்கும் பொதுவாக இருந்த கோபி சந்தனமே குறியீடாகக் காண்பிக்கப்படுகிறது. மேலும், ஐயங்கார் வடகலை, தென்கலை பிரிவு நாமங்களில் உள்ள பல நுண்ணிய வித்தியாசங்களைத் தவறுதலாகக் குறிப்பிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையும் வாசகரின் ஆதங்கத்திற்கு ஒரு காரணம்.

- ஆசிரியர்

நாமம் கேலிக்குறியதா?

இந்த தலைப்பில் தங்கள் இதழில் (ஆகஸ்ட் 2014) வெளி வந்த கட்டுரை ஒரு விவாத மேடையாக காட்சியளிப்பது ஸ்வாரஸ்யம். ஆதிப்பிரான் ஆசிரியர் தன்னுடைய பக்ஷத்தை நியாயப்படுத்துவதற்காக சில உண்மைத் தகவல்களை சாமர்த்தியமாக மறைத்திருக்கிறார். மேலும் அவருடைய அணுகுமுறை தவறானது. பகவான், தாயார் இருவரிடம் கொண்டுள்ள பக்தியின் அடையாளமாக வைணவர்கள் தங்கள் நெற்றியில் திருமண்காப்பை தரிக்கிறார்கள். அதுவே கோயிலில் குடிகொண்டிருக்கும் பெருமாளின் நெற்றியில் காணப்படுவது ஒரு அலங்காரச் சின்னம். மூலவர் (கருங்கல்) நெற்றியில் ஏற்கனவே திலகம் இருந்த போதிலும் அது சோபிக்கவில்லை. தொலைவில் நின்று ஸேவிக்கும் பக்தனுக்கு அது பாழ்நெற்றியாகத்தான் தோற்றமளிக்கும். அதை தவிர்ப்பதற்காகத்தான் அங்கு ஒரு அலங்காரச் சின்னம் இடம் பெறுவது அவசியமாகிறது. கடையில் விற்கப்படும் புஷ்ப மாலை கோயிலில் பெருமாளின் அலங்காரத்திற்கு அங்கமாக சோபிக்கிறது. அதுவே திருமண மேடையில் மணமக்களுக்கு வைதீக சடங்கின் அங்கமாக திகழ்கிறது. அதையே ஜனங்கள் அரசியல்வாதிக்கு அணிவித்து அவனை குஷிப்படுத்துகிறார்கள். இறந்தவனின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அங்கு புஷ்பமாலை அணிவிக்கப்படுகிறது. புஷ்பமாலை ஒன்றுதான். ஆனால் அதன் முக்கியத்துவம் வீற்றிருக்கும் இடத்திற்குத் தகுந்தாற்போல் பெரிதும் மாறுபடுகிறது. பகவான் நெற்றியில் காணப்படும் அலங்காரச் சின்னத்தை வைணவர்கள் நெற்றியில் தரிக்கப்படும் திருமண்காப்பாகப் பாவித்து பேசுவது மிகவும் தவறானது.

ஆழ்வார்கள் இயற்றிய பாடல்களை கோயிலில் ஸேவிப்பதை சாக்காக வைத்துக்கொண்டு தென்கலையாளர்கள் கோயில்களை தங்கள் வசம் ஆக்கிரமித்துக்கொண்டார்கள் என்பது விஷமத் தனமான ப்ரச்சாரம். கோயிலை காத்தவர்கள் தென்கலையார்கள், குளத்தை காத்தவர்கள் வடகலையார்கள் என்பது ப்ரசித்தி. ஆகம விதிகளை பின்பற்றும் அர்ச்சகர்களால் கோயில் நிர்வாகத்தை முழுதும் பார்த்துக்கொள்ள முடியாது. கோயிலில் ஆங்காங்கு நடைபெறவேண்டிய கைங்கர்யங்கள், அருளிச்செயல், சாற்று மறை க்ரமம் (தமிழில்) ஆகியவற்றில் தென் கலையாளர்கள் ப்ரவேசித்தப்பிறகு தான் கோயில் விவகாரங்கள் களைகட்டத் தொடங்கியது. வடகலையாளர்கள் அவர்கள் வசமுள்ள கோயில்களில் தென்கலையாளர்கள் வழிமுறையை பின்பற்றத் தொடங்கினார்கள். காலத்தால் அவர்கள் பிந்தியவர்கள். அதனால் அவர்கள் வசம் கோயில்கள் எண்ணிக்கையில் மிகக்குறைவு. ஆனால் அவைகளில் ப்ரச்சனை, கோர்ட் கேஸ்கள் அதிகம். இதைக்குறிக்கும் வகையில் ‘ஆட்டுக்கு வால் அளவாகத்தான் பகவான் வைத்திருக்கிறார்’ என்று ஆதிப்பிரான் ஆசிரியர் முன்பு தன் இதழில் எழுதியதை ஏனோ மறந்துவிட்டார்!

வைணவன், சென்னை - 33

தற்போது சமூகத்தில் நடைமுறையில் உள்ள ஒரு செயல் அல்லது பேச்சு வழக்கு எப்பொழுது. எப்படி தோன்றியிருக்க்கூடும் என்பதை ஆய்வு செய்வது அவசியமே. முற்காலத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்- நாமம் ஏமாற்றுதலின் அடையாளம் என்ற- அந்தப் பேச்சு வழக்கு துவங்கியிருக்க வேண்டும். காரணமில்லாமல் ஒரு சொல்லாடல் வழக்கத்தில் வந்திருக்க முடியாது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் இந்த விஷயம் ஆராய்ச்சிகுரியதுதான்.

அதற்காக ஆராய்ச்சி என்ற பெயரில் சொந்தமாக ஒரு கதையை கற்பனை செய்து, இதுவே அதற்குரிய காரணம் என்று கூறிவிடுவதா? ஆதிப்பிரான் ஆசிரியர் சொல்லுகின்ற சம்பவதிற்கு ஆதாரம் என்ன? எப்பொழுது நடந்தது, அது பற்றி எந்த புத்தகத்தில் குறிப்பு உள்ளது போன்ற பிரமாணம் இல்லாமல் இவர் எழுதியிருக்கும் கட்டுரையின் (வடகலை, தென்கலை, திருமண் காப்பு, வைணவ ஆலயங்கள் பற்றிய தகவல்கள் ஆகிய) அனைத்து அம்சங்களும் கடுமையான கண்டனத்திற்குரியது.

ஆழ்வார் திருவடிப்பொடி
சே. பத்மநாபன், இரும்பாநாடு.

பாரதி பக்கம் மிளிரும் தங்கள் இதழில் இப்படி “அநீதீ கண்டாலும் காணாமல் செல்வதே விவேகம்" என்ற கோழைத் தனமான கருத்தினைக் கொண்ட கட்டுரையை பாரதி படிக்க நேர்ந்திருந்தால் “நல்லதோர் விருந்தினைப் படைக்கையில் அதன் நடுவிலோர் நாக விட வேண்டா" என்று உம்மை உரிமையுடன் ஒரு கொட்டு குட்டியிருப்பான். திருமண் காப்பை கொச்சைப் படுத்தி கேலியாக்கும் செயலைக் கண்டிப்பதை ஆதரிக்காமலும் எழுதியதாலும்தான் இப்படி எழுத நேரிட்டது. எவர் கருத்தெனினும் அதை முழுமையாக ஆராய்ந்து மெய்பொருள் கண்ட பின்னர் உண்மையைப் பத்திரிகையில் வெளியிடுவதுதான் நன்று என்பதை வலியுறுத்தவே இந்த கடிதம்

S. ஜகந்நாதன், ஸ்ரீரங்கம்


அரைப்பக்க அவியல்Designed and maintained by AKR Consultants